டாடா நிறுவனத்தின் இன்டிகா காரினை அடிப்படையாக கொண்ட இன்டிகோ eCS கார் லிம்கா புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 15 நாட்களில் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பரதேசங்களில் சுமார் 14,000km தூரம் பயணித்துள்ளது. இந்த பயணித்தில் பல விதமான சூழ்நிலைகளை கடந்து வந்துள்ளது
இன்டிகோ eCS கார் இந்தியாவின் 4 எல்லைகளையும் தொட்டுள்ளது. வடக்கில் காஷ்மீர்,தெற்க்கில் கண்ணியாகுமரி,மேற்க்கில் கோட்டேஸ்வர்,கிழக்கில் கீமியூத்.
இந்தியாவில் செடான் பிரிவில் இன்டிகோ eCS கார் 3வது இடத்தில் விற்பனையில் உள்ள காராகும்.
இன்டிகோ eCS கார் சாதனைகள்
தேசம் முழுவதும் இடைநிறுத்தமில்லாமல் தொடர்ந்து பயனித்துள்ளது.
1. அதிகப்பட்ச மைலேஜ் 41.14kmpl
2. சராசரி மைலேஜ் 18.7kmpl
3. மொத்த நேரம் 342 மணிநேரம்.
4. அதிகப்பட்ச நேரம் காரில் பயணித்தது 96 மணிநேரம்.
5. ஒரே தடவையில் அதிகப்பட்ச தூரம் பயணித்தது 998 km
6. 24 மணிநேரத்தில் சராசரியாக பயணித்த தொலைவு 933.8 km
7. குறைந்தபட்ச வெப்பநிலையில் பயணித்தது -4 டிகிரி செல்சீயஸ்
8. அதிகபட்ச வெப்பநிலையில் பயணித்தது 48 டிகிரி செல்சீயஸ்