வால்வோ தி ஐயன் நைட் டிரக் : உலகின் வேகமான டிரக் சாதனை

0

வருகின்ற ஆகஸ்ட்24ந் தேதி உலகின் வேகமான டிரக் என்கின்ற சாதனையை படைக்கும் நோக்கில் 2400 hp ஆற்றலை வெளிப்படுத்தும் வால்வோ தி ஐயன் நைட் டிரக் (The Iron Knight Truck) உலக சாதனையை படைக்கும் விபரங்கள் நேரலையில் யூடியூப் வாயிலாக கானலாம்.

volvo-iron-knight-record-truck

Google News

வால்வோ டிரக் பிரிவின் மிக சிறப்பான தொழில்நுட்ப திறனை கொண்டு அதீத ஆற்றலை வெளிப்படுத்தும் D13 எஞ்ஜின் கொண்ட 2400 hp ஆற்றல் மற்றும் 6000 Nm டார்க்கினை வெளிப்படுத்தும் தி ஐயன் நைட் டிரக் மிக சிறப்பான தொழில்நுட்பம் , வடிவ தாத்பரியம் போன்றவற்றை கொண்டு திறன் மிகுந்த பொறியியல் வல்லுனர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய சர்வதேச வேக சாதனையை படைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள மிகுந்த சக்தி கொண்ட 2400 ஹெச்பி டிரக்கில் டி13 எஞ்ஜினுடன் ஐ-ஷிஃப்ட் டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் இடம்பெற்றுள்ளது.  ஐ-ஷிஃப்ட் டியூவல் கிளட்ச் மிக சிறப்பான முறையில் ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்து செல்லும் வகையில் எவ்விதமான டார்க் இழப்பினையும் சந்திக்காமல் ரேஸ்கார்களில் உள்ளதை போல ஆற்றலை மிக வேகமாக எடுத்து செல்லும் திறன் கொண்ட நவீன கியர்பாக்ஸ் ஐ-ஷிஃப்ட் டியூவல் கிளட்ச் வால்வோ FH மாடல்களை பயன்படுத்தப்படுகின்றது.

volvo-iron-knight-record-truck-2

வால்வோ தி ஐயன் நைட் டிரக் குறித்து கருத்து தெரிவித்த வால்வோ டிரக் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிளேயஸ் நில்சன் , தி ஐயன் நைட் டிரக் வாயிலாக வால்வோ டிரக்குகளின் செயல்திறன் மற்றும் புதுமையான திறனை வெளிப்படுத்தும் , அதே வேளையில் எங்களுடைய நோக்கம் நுட்பம் மற்றும் வடிவமைப்பு போன்றவை புதிய பார்வையுடன் வெளிப்படுத்தவும் , வரும்காலத்தில் புதிய மாடல்களில் இதன் செயல்திறனை பயன்படுத்தி கொள்ள இயலும் என தெரிவித்துள்ளார்.

முந்தைய வால்வோ 1600 hp வைல்ட் வைக்கிங் டிரக் வாயிலாக 1000 மீட்டர் தூரத்தை மணிக்கு 158 கிலோமீட்டர் வேகத்தில் கடந்த சாதித்தது. இந்த சாதனையை முறியடிக்கும் நோக்கில் வால்வோ தி ஐயன் நைட் டிரக் 500 மற்றும் 1000 மீட்டர் என இரண்டிலும் புதிய சாதனையை வருகின்ற 24 ஆகஸ்ட் 2016யில் நிகழ்த்த உள்ளதை நேரடியாக காண வால்வோ யூடியூப் சேனலில் இணைந்திருங்கள்…

உடனுக்குடன் ஆட்டோமொபைல் செய்திகளை பெற ஆட்டோமொபைல் தமிழன் தளத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…