விலை குறைந்த யமஹா பைக் விரைவில் அறிமுகம்

0

இந்தியா யமஹா மோட்டார் நிறுவனத்தின் விலை குறைவான யமஹா பைக் மாடல் ஒன்றுக்கு காப்புரிமை பெற்றுள்ளது. ஐஎன்டிஆர்ஏ ( INDRA – Innovative and New Development based on Responsible Analysis) என்ற பெயரில் பெறப்பட்டுள்ள யமஹா பைக் விலை மிக குறைவானதாக இருக்கும்.

Yamaha-Chennai-Plant

Google News

90 களில் இந்திய சந்தையை ஆக்கரமித்திருந்த யமஹா ஆர்எக்ஸ் 100 மற்றும் சுசூகி சாமுராய் போன்றவற்றின் காலத்தை மறுபிரவேசம் செய்யும் வகையில் விலை குறைவான மாடல்கள் அணிவகுக்க உள்ளது.

பஜாஜ் ஆட்டோ வெளியிட்டுள்ள சிடி 100 பி பைக் விலை குறைந்த இருசக்கர மோட்டார்சைக்கிளாக உள்ள நிலையில் அதற்கு குறைவான விலையை கொண்ட மாடலாக அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் ஏற்ற வகையில் சிறப்பான மாடலாக INDRA அமைய வாய்ப்புகள் உள்ளது.  தொடக்கநிலை வேரியண்ட் பைக் மாடலாக விளங்கும் என்பதனால் எலக்ட்ரிக் ஸ்டார்ட்ர் ,அலாய் வீல் மற்றும் டிஸ்க் பிரேக் ஆப்ஷன்கள் இடம்பெறாது.

INDRA பைக்கில் 100சிசி அல்லது 110சிசி இஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். இதில் 4 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிக்கும். மேலும் அதிகப்படியான மைலேஜ் தரவல்ல மாடலாகவும் , சவாலான விலையில் அமைந்திருக்கும். வளரும் சந்தைகளை குறிவைத்தே அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த பைக் மாடல் சென்னை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. ஐஎன்டிஆர்ஏ அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரலாம்.

2017-Yamaha-INDRA

இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் சமீபத்தில் ரூ.66 கோடி முதலீட்டில் இந்தியாவில் இரண்டாவது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவினை சென்னையில் தொடங்கியுள்ளது.

; motorbeam