இந்த சேவையில் காரின் உட்புறம் சுத்தம் செய்தல் , கிருமிகளை நீக்கும் ஜெர்ம்கிளினிங் , பெயின்ட் பராமரிப்பு , கார் பாலிஷ் மற்றும் வேக்ஸ் , கிளாஸ் பாலிஷ் என பல பராமரிப்பு சேவைகளை 3M நிறுவனம் வழங்குகின்றது.
இந்த சேவையின் மூலம் உங்கள் இல்லத்துக்கே வந்த கார் பராமரிப்பு மற்றும் பாலிஷ் போன்றவற்றை தர உள்ளனர். இதற்க்காக வடிவமைக்கப்பட்டுள்ள பிக் அப் டிரக்கில் இந்த சேவைக்கான உபகரணங்களை கொண்டிருக்கும். முறையான அனுபவம் பெற்ற பணியாளர்களை கொண்டிருக்கும்.
ஜிபிஎஸ் மற்றும் ஜிபிஆர்எஸ் போன்ற நுட்பங்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளதால் எளிதாக வாடிக்கையாளரின் இருப்பிடத்தை அறிய முடியும்.
3M கார் கேர் பிரிவு நாடு முழுவதும் 1400 டீலர்கள் மற்றும் 50 கடைகளை கொண்டு செயல்படுகின்றது.
3M car care launches store to door service for Car care and Detailing.