வோக்‌ஸ்வேகன் டைகன் கார் இந்தியாவில்

0
ஜெர்மனி நாட்டினை தலைமையிடமாக செயல்படும் வோக்‌ஸ்வேகன் நிறுவனம் பல சிறப்புகளை கொண்டதாகும். வோக்ஸ்வேகன் நிறுவனத்தை தொடங்கி வைத்தவரை பலருக்கு தெரிந்திருக்கலாம் தெரியாதவர்களும் தெரிந்து கொள்ளுங்கள் ஹிட்லர் அவர்கள் தான் வோக்ஸ்வேகனை தொடங்கிவைத்தவர்.
இந்தியாவில் வோக்‌ஸ்வேகன் மிகச் சிறப்பான வளர்ச்சியை கண்டுவருகிறது. பல முன்னனி நிறுவனங்கள் புதிய எஸ்யூவீ கார்களை களமிறக்க முயன்று வருகின்றன.அந்த வரிசையில் வோக்ஸ்வேகன் டைகன்(TAIGUN) எஸ்யூவீ  காரினை களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Volkswagen Taigun
மிகச் சிறப்பான தோற்றத்துடன் இருக்கும் பல புதிய எஸ்யூவீ கார்களுக்கு சவாலாக இருக்கும். குறிப்பாக ஃபோர்டு இகோ-ஸ்போர்ட் மற்றும் டஸ்டர் கார்களுக்கு போட்டியாக அமையலாம்.
volkswagen taigun front
வோக்‌ஸ்வேகன் அப் காரினை அடிப்படையாக கொண்டதுதான்.புதிய வோக்ஸ்வேகன் டைகன் எஸ்யூவீ  காரின் நீளம் 3859mm அகலம் 1728mm மற்றும் உயரம் 1570mm. வீல் பேஸ் 2470mm.
வோக்ஸ்வேகன் டைகன் என்ஜின்;
1.0 லிட்டர் TSI என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி 110PS மற்றும் 175NM. 9.2 விநாடிகளில் 100km தொடும். அதிகப்பட்ச வேகம் 186km/hr.இந்தியாவிற்க்கு 2014 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரலாம்
volkswagen taigun
volkswagen taigun dashboard
volkswagen taigun back
thanks to overdrive