ஸ்கேனியா டிரக்குகளில் ரோல்ஓவர் சைட் கர்டெயின் ஏர்பேக் அறிமுகம்

ஸ்கேனியா டிரக் நிறுவனம் உலகின் முதல் ரோல்ஓவர் சைட் கர்டெயின் ஏர்பேக் டிரக்குகளுக்கு அறிமுகம் செய்துள்ளது. வாகனம் விபத்தில் உருளுவதனால் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுவதனை கருத்தில் கொண்டு பக்கவாட்டு காற்றுப்பைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மிக மோசமான விபத்துகளில் லாரி ஓட்டுநர்களின் உயிருக்கு மிகுந்த ஆபத்தினை ஏற்படுத்தும் வகையில் அமைகின்ற டிரக் கவிழ்வதனாலே ஏற்படுகின்றது. இதனைகுறைக்கும்வகையில் ஸ்கேனியா தனது அடுத்த தலைமுறை டிரக் வரிசையில் ரோல்ஓவர் காற்றுப்பைகளை சேர்க்க உள்ளது.

வாகனம் அப்செட் ஆவதனை தடுக்கும் வழிமுறைகள் நவீன டிரக்குகளில் அமைந்திருந்தாலும் சில வேளைகளில் தவிர்க்கமுடியாத காரணங்களால் வாகனம் உருண்டு விடுகின்றது. அதுபோன்ற வேளைகளில் கேபினில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் இந்த பக்கவாட்டு காற்றுப்பைகள் அமையும் என ஸ்கேனியா தெரிவித்துள்ளது.

தனது அடுத்த தலைமுறை மாடல்களில் நிச்சியமாக இடம்பெறும் என ஸ்கேனியா தெரிவித்துள்ள நிலையில் புதிய தலைமுறை ஸ்கேனியா எஸ் மற்றும் ஸ்கேனியா ஆர் வரிசை லாரிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உலகின் முதல் நிறுவனமாக ஸ்கேனியா ரோல்ஓவர் சைட் கர்டெயின் ஏர்பேக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version