ஸ்கோடா எஸ்யூவி பெயர் : கோடியக்

2015 ஜெனிவா மோட்டார் ஷோவில் ஸ்கோடா விஷன் எஸ் என காட்சிப்படுத்தப்பட்ட கான்செபட் நிலை மாடலின் பெயர் ஸ்கோடா கோடியக் எஸ்யூவி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கோடியக் விற்பனைக்கு வருகின்றது.

அலாஸ்கா அருகில் உள்ள தீவுகளில் வாழும் கரடிகளுக்கு கோடியக் என்ற பெயர் உள்ளதால் அதே பெயரினை கொண்டு இந்த புதிய எஸ்யூவி காரினை அழைக்கின்றது. கோடியக் எஸ்யூவி மிகுந்த  வலிமைமிக்க பாதுகாப்பான காராக இருக்கும் என ஸ்கோடா தெரிவிக்கின்றது.

ஸ்கோடா எட்டி எஸ்யூவி காருக்கு மேலாக நிலைநிறுத்தப்பட உள்ள கோடியக் எஸ்யூவி கார் 4.70மீட்டர் நீளம் உள்ளதாகும். ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB தளத்தில் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி காருக்கு இணையான மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது.

சூப்பர்ப் காரில் உள்ள 1.8 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் போன்றவை கோடியக் காரிலும் பொருத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. மேலும் மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்றிருக்கும். ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனில் வரவுள்ளது. இந்தியாவில் ஸ்கோடா கோடியக் எஸ்யூவி 2017 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரலாம்.

 

Exit mobile version