Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

சிபி ஹார்னெட் 160R Vs சிபி யூனிகார்ன் 160 – ஒப்பீடு

by automobiletamilan
December 16, 2015
in செய்திகள்

ஹோண்டா சிபி ஹார்னெட் 160R மற்றும் ஹோண்டா சிபி யூனிகார்ன் 160 என இரண்டு பைக்கில் எந்த பைக் வாங்கலாம்?  எது பெஸ்ட் சாய்ஸ் ? சிபி ஹார்னெட் 160ஆர் Vs சிபி யூனிகார்ன் 160 என்ற செய்தி தொகுப்பில் கானலாம்.

honda-cb-hornet-160r-fr

150சிசி முதல் 160சிசி பைக்குகளில் பிரிமியம் ஆப்ஷனுடன் ஸ்போர்ட்டிவ் தோற்றத்துடன் சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தும் பைக்காக ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் சந்தைக்கு வந்துள்ளது. ஹோண்டா ஹார்னெட் 160ஆர் பைக்கிற்க்கு கீழாக பிரபலமான சிபி யூனிகார்ன் 160 பைக்கினை  நிலைநிறுத்தியுள்ளது.

சிபி ஹார்னெட் 160R Vs சிபி யூனிகார்ன் 160

தோற்றம்

சிபி ஹார்னெட் 160R  பைக் மிகவும் ஸ்டைலிசாக கூர்மையான முகப்பு விளக்குகளுடன் மிகவும் நேர்த்தியான தோற்றத்தில் அமைந்துள்ளது. பெட்ரோல் டேங்க் பகுதியில் ஃபேரிங் செய்யப்பட்டுள்ளது. சிபி யூனிகார்ன் 160 பைக் இவற்றை பெறாமல் சாதரன மாடலாக காட்சி தருகின்றது. மேலும் பின்புறத்தில் H வடிவ டெயில் விளக்கினை பெற்றுள்ளது. ஹார்நெட் 160ஆர் பைக்கில் X வடிவ எல்இடி விளக்குகளை பெற்றுள்ளது.

honda-cb-unicorn-160

சிபி ஹார்னெட் 160R பைக்  5 ஸ்போக் கொண்ட மல்டி ஸ்போக் அலாய் வீலுடன் சிறப்பாக உள்ளது. 6 ஸ்போக்குகளை மட்டுமே யூனிகார்ன் 160 பெற்றுள்ளது.

சிறப்பான தோற்றத்துடன் மிகவும் பிரிமியமாக சிபி ஹார்னெட் 160R காட்சி தருகின்றது.

ஹோண்டா சிபி ஹார்னெட் 160R

honda-cb-unicorn-160-side

என்ஜின்

இரண்டு பைக்குகளிலுமே ஒரே என்ஜின் ஆனால் யூனிகார்ன் 160 பைக்கை விட கூடுதலாக 1.11 பிஹெச்பி ஆற்றலை சிபி ஹார்னெட் 160R பைக் வெளிப்படுத்துகின்றது. பிஎஸ் IV என்ஜினை ஹார்நெட் 160ஆர் பைக் பெற்றுள்ளது. BS IV நடைமுறை ஏப்ரல் 2017 ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகின்றது.

  சிபி ஹார்னெட் 160R   சிபி யூனிகார்ன்  160
162.71 சிசி  162.71 சிசி
 15.66 பிஹெச்பி  14.55 பிஹெச்பி
 14.76 என்எம்  14.66 என்எம்
 வேகம் மணிக்கு 110கிமீ  வேகம் மணிக்கு 106கிமீ
 5 ஸ்பீட் கியர்   5 ஸ்பீட் கியர்

பிரேக்

சிபி ஹார்னெட் 160R பைக்கில்  முன்புறத்தில் 276மிமீ 3 பிஸ்டன் கேலிபர் கொண்ட டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. பின்புறத்தில் 130மிமீ டிரம் பிரேக் மற்றும் 240மிமீ டிஸ்க் பிரேக் என இரண்டு விதமான ஆப்ஷனில் கிடைக்கின்றது. மேலும் சிபிஎஸ் பிரேக் டாப் வேரியண்டில் உள்ளது.

சிபி யூனிகார்ன் 160 பைக்கில் முன்புறத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 130மிமீ டிஸ்க் பிரேக் ஆப்ஷனும் உள்ளது. இதில் சிபிஎஸ் ஆப்ஷனும் உள்ளது.

பரிமாணங்கள்

 

சிபி ஹார்னெட் 160R  சிபி யூனிகார்ன் 160
நீளம் மிமீ  2041  2045
அகலம் மிமீ  783  757
உயரம் மிமீ 1067  1060

கிரவுண்ட்

கிளியரன்ஸ் மிமீ

 164  150
வீல்பேஸ் மிமீ 1345  1324
 எடை கிலோ  140  135
டேங்க் லிட்டர்  12  12

சஸ்பென்ஷன்

சிபி ஹார்னெட் 160R பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் மற்றும் பின்புறத்தில் மோனோசாக் அப்சார்பர் உள்ளது.

சிபி யூனிகான் 160 பைக்கில் முன்புறத்தில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் மற்றும் பின்புறத்தில் ஸ்பிரிங்குடன் கூடிய மோனோசாக் அப்சார்பர் உள்ளது.

விலை

ஹோண்டா சிபி யூனிகார்ன் 160 பைக் விலை 

CB Unicorn 160 STD – ரூ.83,956

CB Unicorn 160 CBS – ரூ.89,795

ஹோண்டா சிபி ஹார்னெட் 160R பைக் விலை

CB Hornet 160R STD – ரூ.89,872

CB Hornet 160R CBS – ரூ.94,785

{ அனைத்தும் சென்னை ஆன்ரோடு விலை விபரம் }

honda-cb-hornet-160r-black.1

எது பெஸ்ட் சாய்ஸ்

ஹோண்டா சிபி யூனிகார்ன் 160 பைக்கை விட பல கூடுதலான சிறப்பம்சங்களை கொண்டுள்ள சிபி ஹார்னெட் 160R பைக்கின் ஆற்றல் , டார்க் , ஸ்டைல் என அனைத்திலும் மிகவும் பிரிமியமாக விளங்குகின்றது. பிரேக் ஆப்ஷனில் இரண்டு விதங்களை கொண்டுள்ளது. அதனால் விலையும் கூடுதல்தான்.

நேக்டு ஸ்போர்ட்டிவ் பைக்காக  மிக சிறப்பான செயல்திறனுடன் வாங்க நினைப்பவர்களுக்கு சிபி யூனிகார்ன் 160 பைக்கினை விட சிபி ஹார்னெட் 160R பைக்  சிறந்த சாய்ஸாகும்.

[envira-gallery id=”4234″]

 

Tags: CompareHonda Bikeசிபி யூனிகார்ன் 160சிபி ஹார்னெட் 160R
Previous Post

ஹோண்டா கனெக்ட் செயலி அறிமுகம்

Next Post

பெனெல்லி டிஎன்டி25 பைக் விற்பனைக்கு வந்தது

Next Post

பெனெல்லி டிஎன்டி25 பைக் விற்பனைக்கு வந்தது

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version