சந்தையிலிருந்து ஹீரோ இம்பல்ஸ் பைக் நீக்கம்

கடந்த 2011ல் சந்தைக்கு வந்த ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்ற ஹீரோ இம்பல்ஸ் பைக் மாடலை ஹீரோ மோட்டோகார்ப் தனது இணைய பக்கத்திலிருந்து நீக்கியுள்ளது. 150சிசி என்ஜினை இம்பல்ஸ் பைக் பெற்றிருந்தது.

ஹீரோ இம்பல்ஸ்

149.2 cc சிங்கிள் சிலிண்டர் என்ஜினை பெற்று 13.2 பிஎஸ் அதிகபட்ச ஆற்றலுடன் 13.4 என்எம் டார்க்கினை வெளிப்படுத்துகின்றது.  இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த பைக்கின் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் டிரம் பிரேக் ஆப்ஷனை பெற்றதாக உள்ளது.

245மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆப்ஷனுடன் ஆஃப்ரோடு பயணங்களுக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கும் இம்பல்ஸ் மாடலில் புதிதாக கூடுதல் சிசி கொண்ட வேரியன்டை பெற்ற மாடலாக வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்தமாதிரியான எந்தவொரு திட்டத்தையும் ஹீரோ செயல்படுத்தும் திட்டமில்லை என்றே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது அதிகார்வப்பூர்வ இணைய பக்கத்திலிருந்து ஹீரோ இம்பல்ஸ் பைக் நீக்கப்பட்டுள்ளது.

Exit mobile version