Automobile Tamil

ஹீரோ டூயட் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் விரைவில்

ஹீரோ டூயட் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர் இன்னும் சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு போட்டியாக ஹீரோ டூயட் ஸ்கூட்டர் வருகின்றது.
ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்

விற்பனையில் முன்னிலை வகிக்கும் ஆக்டிவா ஸ்கூட்டருக்கு சரியான போட்டி மாடலாக வரவுள்ள டூயட் ஸ்கூட்டரில் ஹீரோ மோட்டோகார்ப் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு விற்பனைக்கு வரவுள்ள புதிய ஹீரோ டூயட் ஸ்கூட்டரில் 8.4பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 111சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். சிவிடி டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மிக சிறப்பான தோற்றம் முன்புறத்தில் வி வடிவ குரோம் பட்டை , ஜூபிட்டர் ஸ்கூட்டரில் உள்ளதை போன்ற வெளிபுறத்தில் பெட்ரோல் நிரப்பும் லிட்  , மொபைல் சார்ஜர் வசதி போன்றவற்றை பெற்றிருக்கும்.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்

ஹீரோ நிறுவனத்தின் டேஷ் கான்செப்டில் உருவான புதிய மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரும் சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஸ்கூட்டரிலும் 110சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.
மேஸ்ட்ரோ ஸ்கூட்டரில் உள்ள என்ஜின் 2017ம் ஆண்டு வரை மட்டுமே ஹீரோ விற்பனை செய்ய முடியும் என்பதால் மேஸ்ட்ரோ ஸ்கூட்டருக்கு மாற்றாக மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரில் புதிய 110சிசி என்ஜினுடன் நிலை நிறுத்த உள்ளது.
டீலர்களுக்கு டெலிவரி தொடங்கப்பட்டுள்ளதால் வரும் ஆகஸ்ட் இறுதியிலோ அல்லது செப்டம்பர் தொடக்கத்திலோ விற்பனைக்கு வரலாம்.
Upcoming Hero Duet and Mastero Edge details
Exit mobile version