Site icon Automobile Tamil

ஹீரோ மேஸ்ட்ரோ ஸ்கூட்டர் நீக்கம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மேஸ்ட்ரோ ஸ்கூட்டர் மாடலை தனது ஸ்கூட்டர் வரிசையில் இருந்து நீக்கியுள்ளது. ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் வரவேற்பினால் மேஸ்ட்ரோ ஸ்கூட்டர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

<–more–>

ஹீரோ மற்றும் ஹோண்டா நிறுவனத்தின் கூட்டணி முறிவுக்கு பின்னர் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டரின் நகலாக விளங்கிய மேஸ்ட்ரோ ஸ்கூட்டருக்கு செலுத்த வேண்டிய ஆதாய உரிமை கட்டணம் (ராயல்டி) நிறைவுறுவதனை ஒட்டியும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ சொந்த தயாரிப்பு மாடலான மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரின் அபரிதமான வரவேற்பினாலும் மேஸ்ட்ரோ ஸ்கூட்டரை தனது இணையத்திலிருந்து நீக்கியுள்ளது.

விற்பனையில் உள்ள ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்களுக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்தும் மாடலாக வந்துள்ள மேஸ்ட்ரோ எட்ஜ் மாடலில் 8.3 பிஎஸ் ஆற்றலை வெளிபடுத்தக்கூடிய 110.9சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 8.3என்எம் ஆகும். மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர் மைலேஜ் லிட்டருக்கு 65.8கிமீ ஆகும். மேலும் மெட்டல் பாடிகொண்ட டூயட் ஸ்கூட்டரும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

ஹோண்டா நிறுவனத்தின் மாடல்களை அடிப்படையாக கொண்ட மற்ற மாடல்களான பேஸன் எக்ஸ் ப்ரோ , இம்பல்ஸ் மற்றும் இக்னைடர் மாடல்களும் விரைவில் சந்தையிலிருந்து நீக்கபடலாம்.

Exit mobile version