ஹூண்டாய் கார்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

0

இந்தியா ஹூண்டாய் மோட்டார் பிரிவின் கார்களின் விலையை ஹூண்டாய் உயர்த்தியுள்ளது. கார் உற்பத்தி செலவீனம் அதிகரிப்பதனால் ஹூண்டாய் கார்கள் விலை ரூ.3,000 முதல் ரூ.20,000 வரை அதிகபட்சமாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

hyundai-creta-anniversary-edition

Google News

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளராக விளங்கும் ஹூண்டாய் நிறுவனத்தில் இயான், ஐ10, கிராண்ட் ஐ10 ,  எக்ஸ்சென்ட் , எலைட் ஐ20 , ஐ20 ஏக்டிவ் , வெர்னா , எலன்ட்ரா , க்ரெட்டா மற்றும் சான்டா ஃபீ போன்ற மாடல்கள் விற்பனையில் உள்ளது.

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு , மூலப்பொருட்கள் ,  உற்பத்தி செலவீனங்கள் அதிகரிப்பு போன்ற காரண்ங்களாலே விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

எலைட் ஐ20 , க்ரெட்டா எஸ்யூவி மற்றும் கிரான்ட் ஐ10 போன்ற கார்கள் ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனையில் முன்னனி வகிக்கும் மாடல்களாகும். அனைத்து மாடல்களின் விலையும் ரூ.3,000 முதல் ரூ.20,000 வரை அதிகபட்சமாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வு ஆகஸ்ட் 16 ,2016 முதல் அமலுக்கு வருகின்றது.

சமீபத்தில் மாருதி சுசூகி நிறுவனமும் தன்னுடையை பெரும்பாலான மாடல்களை ரூ.1000 முதல் ரூ.20,000 வரை உயர்த்தியுள்ளது. சமீபத்தில் ஹூண்டாய் க்ரெட்டா சிறப்பு ஆன்னிவர்சரி எடிசன் விலை வெளியாகியுள்ளது.