ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விபரம்

0
ஹூண்டாய் க்ரெட்டா காம்பேக்ட் உற்பத்தி நிலை மாடலின் படங்கள் வெளியாகியுள்ளது. வருகின்ற ஜூலை 21ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள நிலையில் சில படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளது,

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி
சான்டா ஃபீ எஸ்யூவி காரின் குழந்தை போன்று விளங்கும் க்ரெட்டா முகப்பில் மூன்று ஸ்லாட் குரோம் கிரிலுக்கு மத்தியில் ஹூண்டாய் இலச்சினை பதிக்கப்பட்டுள்ளது.
புராஜெக்டர் முகப்பு விளக்குகள் , பகல் நேர எல்இடி விளக்குகள் , செங்குத்தான பனி விளக்குகளை கொண்டுள்ளது. பக்கவாட்டில் 17 இஞ்ச் டைமன்ட் கட் ஆலாய் வீல் , பின்புறத்தில் நம்பர் பிளேட்டுக்கு மேல் குரோம் பட்டை இணைக்கப்பட்டுள்ளது,
ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி
உட்புறத்தில் ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு , அலைபேசி கட்டுப்பாடு பொத்தான்கள் , தொடுதிரை ஆடியோ அமைப்பு போன்றவை உள்ளன.
ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி கார் விலை ரூ.8 முதல் 13 லட்சத்திற்க்குள் இருக்கும்.
ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி
ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி
Hyundai Creta SUV pics and details

image source : felix jose twitter