ஹூண்டாய் க்ரெட்டா முன்பதிவு 1 லட்சம் தொடுகின்றது

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி கார் மிக சிறப்பான வரவேற்பினை பெற்று கடந்த 5 மாதங்களில் 92,000 முன்பதிவுகளை கடந்துள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த எண்ணிக்கை 1 லட்சத்தினை எட்ட வாய்ப்புள்ளது.

Hyundai-2BCreta-2Bsuv

காம்பேக்ட் ரக எஸ்யூவி பிரிவில் மிக சிறப்பான மாடலாக க்ரெட்டா நிலைநிறுத்தப்பட்டுள்ளதால் மற்ற போட்டியார்களை விட சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது. க்ரெட்டா காரில் ஒரு பெட்ரோல் மற்றும் இரண்டு டீசல் என்ஜின் ஆப்ஷன் ஆட்டோமேட்டிக் மற்றும் மெனுவல் என இரண்டு கியர்பாக்ஸ் போன்றவை க்ரெட்டா காரின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றது.

இந்தியா மட்டுமல்லாமல் 77 வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ள நிலையில் இதுவரை 16,000 கார்களுக்கு ஆர்டர் பெற்றுள்ளது. இதில் 12,270 வாகனங்கள் அனுப்பட்டுள்ளது. மேலும் இதுவரை இந்தியா முழுமைக்கும் 35,000 கார்கள் டெலிவரிக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும் படிக்க ; 2016 இந்தியாவின் சிறந்த கார் க்ரெட்டா

மேலும் கடந்த சில மாதங்களாக மாதம் 7500 கார்களுக்கு மேல் டெலிவரி கொடுக்கப்பட்டு வந்தாலும் காத்திருப்பு காலம் தொடர்ந்து அதிகரித்து வரவதனால் சென்னை உற்பத்தி ஆலையில் மேலும் உற்பத்தி அதிகரிக்கவும் . வரும் ஜனவரி முதல் மாதம் 10,000 க்ரெட்டா கார்கள் டெலிவரி செய்யவும் திட்டமிட்டுள்ளதாக பிஸ்னஸ் ஸ்டாண்டர்டு தெரிவிக்கின்றது.