ஹோண்டாவின் 41,580 கார்களுக்கு ரீகால் அழைப்பு

2012 ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டாவின் சிட்டி , ஜாஸ் , அக்கார்டு மற்றும் சிவிக் கார்களில் பொருத்தப்பட்டுள்ள டகடா ஏர்பேக் இன்பிளேடர்களில் உள்ள பிரச்சனைக்கு உண்டான தீர்வினை இலவசமாக வழங்கும் நோக்கில் திரும்ப அழைக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு தயாரித்து விற்பனை செய்யப்பட்ட கார்களில் திரும்ப அழைக்கப்படுகின்ற எண்ணிக்கை விபரம்

  • ஹோண்டா ஜாஸ் – 7,265
  • ஹோண்டா சிட்டி – 32,456
  • ஹோண்டா சிவிக்  -1,200
  • ஹோண்டா அக்கார்டு – 659

என மொத்தம் 41,580 கார்களை திரும்ப அழைத்து இதற்கு உண்டான தீர்வினை இலவசமாக தங்களது அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் வாயிலாக தொடங்கியுள்ளது. தங்களுடைய காரும் இந்த அழைப்பு பட்டியலில் உள்ளதா என்பதனை அறிய ஹோண்டா நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் இதற்கு உண்டான வசதியை ஏற்படுத்தியுள்ளது. வாகனத்தின் 17 இலக்க வின் நம்பரை அதாவது வாகனத்தின் அடையாள எண் கொண்டு அறியலாம்.

டகடா காற்றுப்பை பிரச்சனையால் சர்வதேச அளவில் 13க்கு மேற்பட்ட தயாரிப்பாளர்களின் 100 மில்லியன் கார்கள் திரும்ப அழைக்கப்பட்டு சரிசெய்யப்படுகின்றது.

இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் விரைவில் புதிய ஹோண்டா சிட்டி மற்றும் WR-V க்ராஸ்ஓவர் மாடலையும் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

Share