ஹோண்டா காம்பெக்ட் எஸ்யூவி எப்பொழுது ?

ஹோண்டா வெசல் எஸ்யூவி இந்தியாவிற்க்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெசல் எஸ்யூவி இல்லை அதற்க்கு மாற்றாக புதிய  7 இருக்கை கொண்ட எஸ்யூவி காரை ஹோண்டா வடிவமைத்து வருகின்றதாம்.

ஹோண்டா காம்பெக்ட் எஸ்யூவி

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் டஸ்ட்டர் கார்களின் வெற்றியை தொடர்ந்து அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் காம்பெக்ட் எஸ்யூவிக்கு முக்கியத்துவம் கொடுக்க துவங்கி உள்ளன.

மொபிலியோ எம்பிவி காரின் பல பாகங்களை இந்த எஸ்யூவி காரில் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளதாம். மேலும் என்ஜின் ஆப்ஷன் மொபிலியோ காரில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது.

 7 இருக்கை கொண்ட இந்த எஸ்யூவி கார் டஸ்ட்டர் , டெர்ரோனோ  மற்றும் எக்ஸ்யூவி500 காருக்கு போட்டியினை தர வாய்ப்புகள் உள்ளது. அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.