Automobile Tamil

ஹோண்டா கார்களில் காற்றுப்பை பிரச்சனை

ஹோண்டா இந்திய கார் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் ஹோண்டா சிட்டி , ஜாஸ் மற்றும் சிவிக் போன்ற கார்களில் ஓட்டுநர் பக்க காற்றுப்பைகளின் இன்ஃபிளேட்டரில் பிரச்சனை உள்ளதால் திரும்ப அழைக்க உள்ளது.

honda-city

காற்றுப்பை இன்ஃபிளேட்டரில் உள்ள பிரச்சனையால் விபத்தின் பொழுது காற்றுப்பைகள் சரிவர திறக்காமல் போக வாய்ப்புகள் உள்ளதால் உலகயளவில் நடைபெற்று வரும் இந்த திரும்ப அழைத்தல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 57, 676 கார்களில் இந்த பிரச்சனை உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா நிறுவனத்தின் சேவை மையங்கள் வாயிலாக நாளை ( 20.02.2016 ) முதல் எவ்விதமான கட்டனங்களும் இல்லாமல் இலவசமாக ஒட்டுநர் பக்க ஏர்பேக் இன்ஃபிளேடர் மாற்றி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஹோண்டா காரும் இந்த பட்டியலில் உள்ளதா என அறிந்துகொள்ள கீழுள்ள இணைப்பினை பயன்படுத்தி உங்கள் வாகனத்தின் 17 இலக்க வின் நம்பரை கொண்டு தெரிந்து கொள்ளவும்.  ஹோண்டா வின் நம்பர்

Exit mobile version