ஹோண்டா சிறியரக கார்கள்

0
ஹோண்டா நிறுவனம் எதிர்காலத்தில் மிக அசைக்கமுடியாத சக்தியாக இந்தியாவில் இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் கொண்டு செயல்பட்டுவருகின்றது. வருகிற 11 அன்று வெளிவரவுள்ள ஹோண்டா அமேஸ் இந்திய சந்தையில் உள்ள பல முன்னோடி கார்களுக்கு கடுமையான நெருக்கடி தரும் என கருதப்படுகின்றது.

மேலும் சிறிய ரக கார் சந்தையிலும் களமிறங்க திட்டடுமிட்டுள்ளது. அதாவது தற்பொழுது மிக அதிகமாக விற்பனை ஆககூடிய கார்களான ஆல்டோ மற்றும் இயான் போன்ற கார்களின் சந்தையினை குறி வைத்து சிறய ரக கார்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாம்.
honda n one
ஹோண்டா தனது தாய்(ஜப்பான்) நாட்டில் கெய் என்ற பிராண்டில் மிக சிறியரக கார்களை விற்பனை செய்து வருகின்றது. இந்த கெய் கார்களில் 660சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதே கார் இந்தியாவிற்க்கு வருமா என்ற கேள்விக்கு இந்தியர்களின் இரசனை மற்றும் ஜப்பானியர்களின் இரசனை வேறு என்பதால் இந்தியாவிற்க்கு வேறு விதமான புதிய எஞ்சின் வடிவமைக்கப்படும் என ஹிரோனோரி கனயாமா தெரிவித்துள்ளார்.
ஆல்டோ மாதத்திற்க்கு 20,000 கார்கள் விற்கின்றன. மேலும் இயான் கார்கள் மாதம் 8,000 கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே இதனை குறிவைத்து புதிய சிறியரக காரினை களமிறக்குகின்றது.