Automobile Tamil

ஹோண்டா பிஆர்-வி எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

ரூ.8.75 லட்சம் விலையில் ஹோண்டா பிஆர்-வி காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்  விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 7 இருக்கைளை கொண்ட முதல் காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலாக விளங்கும் ஹோண்டா BR-V காரில் சிவிடி ஆட்டோமேட்டிக் ஆப்ஷனும் உள்ளது.

honda-br-v-suv-car

அமேஸ் , பிரியோ மொபிலியோ போன்ற கார்கள் உருவாக்கப்பட்ட அதே தளத்தில் BR-V எஸ்யூவி காரும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிக கம்பீரமான ஸ்ட்டைலிசான தோற்றத்தில் விளங்கும் காரில் மிக அகலமான க்ரோம் பட்டைக்கு மத்தியில் அமைந்துள்ள ஹோண்டா லோகோ பதிக்கப்பட்டுள்ளது.

மிக அகலமான ஏர்டேம் , வட்ட வடிவ பனி விளக்குகள் , புராஜெக்ட்ர் முகப்புவிளக்குகளை பெற்றுள்ளது. 4455மிமீ நீளம் , அகலம் 1735மிமீ மற்றும் உயரம் 1635மிமீ பெற்றுள்ளது. மேலும் வீல்பேஸ் 2660மிமீ மற்றும் 200மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்றுள்ளது.

உட்புறத்தில் அமேஸ் காரின் டேஸ்போர்டினை தழுவியே உள்ளது. ஸ்டீயரிங் கன்ட்ரோல் ஆடியோ , 2 டின் ஆடியோ சிஸ்டம் பூளூடூத் , லெதர் இருக்கைகளை பெற்றுள்ளது. ஆனால் தொடுதிரை அமைப்பு டாப் வேரியண்டிலும் இல்லை.

1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனை பெற்றுள்ளது. 119 hp ஆற்றல் மற்றும் 145 Nm டார்க் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 100 hp மற்றும் 200 Nm டார்க் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் போன்றவற்றை பெற்றிருக்கும். இதில் டீசல் மற்றும் பெட்ரோல் மாடலில் 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக சிவிடி கியர்பாக்சினை பெட்ரோல் மாடலில் கொண்டுள்ளது.

ஹோண்டா பிஆர்-வி டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 21.9 கிமீ ஆகும். பெட்ரோல் மெனுவல் மைலேஜ் லிட்டருக்கு 15.4கிமீ மற்றும் ஆட்டோமேட்டிக் 16 கிமீ ஆகும்.

ஹோண்டா பிஆர்-வி பெட்ரோல்  விலை பட்டியல்
ஹோண்டா பிஆர்-வி டீசல் விலை பட்டியல்

{ அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை }

ஹூண்டாய் க்ரெட்டா , டஸ்ட்டர் , டெரோனோ போன்ற கார்களுடன் நேரடியான போட்டியை ஹோண்டா BR-V ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version