Automobile Tamilan

ஹோண்டா பிஆர் வி 5 நட்சத்திர மதிப்பீடு – ASEAN NCAP

அடுத்த சில வாரங்களில் வரவுள்ள ஹோண்டா பிஆர் வி காம்பேக்ட் எஸ்யூவி கார் ஏசியான கிராஷ் டெஸ்ட் சோதனையில் 5 நட்சத்திர மதிப்பீட்டினை பெற்றுள்ளது. 16 புள்ளிகளுக்கு 14.79 புள்ளிகள் பெற்று வயது வந்தோர் பாதுகாப்பிற்கு 5 நட்சத்திர மதிப்பினை பெற்றுள்ளது.

Honda-BR-V-crash-test

 

குழந்தைகள் பாதுகாப்பில் 72 % பாதுகாப்பினை உறுதிசெய்து 4 நட்சத்திர மதிப்பிடை பெற்றுள்ளது. மேலும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் இருக்கை பட்டை நினைவூட்டல் அமைப்பு இல்லாத  பேஸ் வேரியண்ட் மாடல்களில் 4 நட்சத்திர மதிப்பீடு பெற்றுள்ளது. பேஸ் வேரியண்டில் முன்பக்க இரட்டை காற்றுப்பை , ஏபிஎஸ் போன்றவை உள்ளன.

7 இருக்கைகளை கொண்ட ஹோண்டா பிஆர் வி எஸ்யூவி கார் க்ரெட்டா , எஸ் க்ராஸ் மற்றும் டஸ்ட்டர் போன்ற மாடல்களுடன் போட்டியிடும் வகையில் அமேஸ் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 1.5 லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் சிவிடி ஆப்ஷனும் வரவாய்ப்புகள் இருக்கின்றது.

இந்த மாதத்தின் இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்திலோ பிஆர்வி எஸ்யூவி கார் விற்பனைக்கு வரவுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தபுகாரா ஆலையில் தயாரிக்கப்பட உள்ளது.

தாய்லாந்தில் விற்பனையில் உள்ள மாடலே ஏசியான் கிராஷ் டெஸ்ட் சோதனையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்தியாவிலும் பிஆர் வி காரில் முன்பக்க இரு காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , இபிடி , விஎஸ்ஏ மற்றும் ஹெஎஸ்ஏஏ போன்றவை அனைத்து வேரியண்டிலும் நிரந்தர அம்சமாக இருக்கும்.

Exit mobile version