ஹோண்டா 100சிசி பைக் விரைவில்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளென்டர் பைக்கிற்க்கு போட்டியாக ஹோண்டா புதிய 100சிசி பைக்கினை இன்னும் சில மாதங்களில் வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆண்டிற்க்கு ஸ்பிளென்டர் பைக்கள் 20 இலட்சத்திற்க்கு அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை கருத்தில் கொண்டே ஹோண்டா புதிய 100 சிசி பைக்கினை உருவாக்கி வருகின்றது. ஹோண்டா டிரீம் யூகா பைக்கின் சிரியஸ்யில் உருவாக உள்ள 100 சிசி பைக் ஸ்பிளென்டர் பைக்கின் விலையே இருக்கலாம்.

ஹோண்டா புதிய 100 சிசி பைக் பெரும் வரவேற்பினை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரவேற்பினை பெற்றால் ஹீரோ ஸ்பிளென்டர் பைக் கடுமையான போட்டியினை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதில் மாற்றமில்லை. இந்த 100 சிசி பைக்கிற்க்கான ஹோண்டா கோட் K23 ஆகும்.

Exit mobile version