Automobile Tamilan

ஃபியட் மொபி இந்தியா வருமா ?

ஃபியட் மொபி ஹேட்ச்பேக் கார் பிரேசில் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. க்விட் , ரெடி-கோ போன்ற காருக்கு போட்டியாக ஃபியட் மொபி நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

Fiat Mobi Brazil official photos

பிரேசில் சந்தையில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள க்விட் காருக்கு போட்டியாக மொபி அறிமுகம் ஆகியுள்ளது. மொபி காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் எத்தனால் ஆப்ஷனில் வந்துள்ளது.

1.0 லிட்டர் ஃபிளெக்ஸ் ஃப்யூவல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெட்ரோல் மாடலில் 73 hp ஆற்றல் மற்றும் 93 Nm டார்க் வெளிப்படுத்தும். எத்தனால் மாடலில்  75 hp ஆற்றல் மற்றும் 97 Nm டார்க் வெளிப்படுத்தும்.  இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்மோக்டூ முகப்பு விளக்குகளுடன் அகலமான கிரில் அமைப்புடன் எடுப்பான முகப்பு தோற்றத்துடன் விளங்கும் மொபி காரில் வட்ட வடிவ பனி விளக்குகள் மற்றும் அகலமான ஏர்டேம் வென்டினை பெற்றுள்ளது.

பக்கவாட்டில் பேஸ் வேரியண்டில் 13 இஞ்ச் வீல் மற்றும்  14 இஞ்ச் அலாய் வீல் டாப் வேரியண்டில் பெற்றுள்ளது. பின்புறத்தில் மிக அகலமான பின்புற கண்ணாடி மற்றும் டெயில் விளக்குகள் போன்றவற்றை நேர்த்தியாக பெற்றுள்ளது.

உட்புறத்தில் எளிமையான தோற்ற பொலிவினை வழங்கும் வகையிலான டேஸ்போர்டினை பெற்றுள்ளது. ஆடியோ சிஸ்டம் , பூளூடூத் , யூஎஸ்பி , ஆக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது.

இந்திய சந்தைக்கு ஃபியட் மொபி வருமா என்பதற்கான  எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. பிரேசிலில் மொபி காரின் விலை இந்திய மதிப்பின்படி ரூ. 6.08 லட்சம் முதல் 8.35 லட்சம் வரையிலான விலையில் வந்துள்ளது.

Exit mobile version