ஃபோக்ஸ்வேகன் பீட்டில் கார் மீண்டும் இந்தியா வருகை

ஃபோக்ஸ்வேகன் பீட்டில் கார் மீண்டும் இந்திய சந்தையில் நவம்பர் இறுதிக்குள் விற்பனைக்கு வரவுள்ளது. பீட்டில் கார் மிகவும் பாரம்பரிய மிக்க கார் மாடலாகும்.
ஃபோக்ஸ்வேகன் பீட்டல்

1940ம் ஆண்டு முதல் சந்தையில் பல மாற்றங்களை கண்டு தொடர்ந்து உலகத்தின் பல நாடுகளில் விற்பனை செய்யப்படும் ஃபோக்ஸ்வேகன் பீட்டல் கார் இதுவரை 23மில்லியன் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை பீட்டில் கார் இந்திய சந்தையில் பெரிதான விற்பனையை பதிவு செய்யாத காரணத்தால் திரும்ப பெறப்பட்டது. புதிய தலைமுறை பீட்டல் கடந்த 2013ம் ஆண்டில் உலகம் முழுதும் அறிமுகம் செய்யப்பட்டது . ஆனால் இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை.

இரண்டு கதவுகளை கொண்ட ஃபோக்ஸ்வேகன் பீட்டில் காரில் 114பிஹெச்பி ஆற்றல் மற்றும் 172என்எம் டார்க் வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.  இதில் 7 வேக DSG கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

தற்பொழுது இந்தியாவில் 44 பீட்டில் கார்களை ஃபோக்ஸ்வேகன் இறக்குமதி செய்துள்ளதால் இன்னும் சில வாரங்களில் அதிகார்வப்பூர்வமாக பீட்டில் விற்பனைக்கு வரும்.

ஃபோக்ஸ்வேகன் பீட்டல் கார் விலை ரூ.30 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Volkswagen beetle to launch on November end in India

Exit mobile version