Automobile Tamilan

ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் கார் விரைவில்

ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் காம்பேக்ட் செடான் காரை வரும் ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர்
குஜாராத் மாநிலம் சனந்த பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய ஃபோர்டு தொழிற்சாலையை ஃபோர்டு தலைமை செயல் அதிகாரி மார்க் ஃபீல்ட்ஸ் திறந்து வைத்துள்ளார். 
புதிய ஆலை திறப்புவிழாவை முன்னிட்டு மிக நேர்த்தியான தோற்றத்தில் பல நவீன வசதிகள் கொண்ட ஃபிகோ ஆஸ்பயர்  செடான் காரினை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஃபிகோ ஆஸ்பயர் காரில் இரட்டை காற்றுப்பைகள் மற்றும் பக்கவாட்டிலும் காற்றுப்பைகள் பொருத்தப்பட்டிருக்கும். ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி காரில் உள்ளது போல விபத்தின்பொழுது அவசர கால மையத்திற்க்கு தானியங்கி முறையில் தகவலை அளிக்கும்.
மேலும் பொழுதுபோக்கு வசதிகளை அளிக்கு ஆப்லிங்க வசதி , மொபைல்போன் டாக்கிங் அமைப்பு போன்றவை இருக்கும்.
மூன்று விதமான என்ஜின் வகைகளில் கிடைக்கும். அவை
1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 80பிஎச்பிக்குள் இருக்கும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வகையிலும் கிடைக்கும். இதன் ஆற்றல் 109 பிஎச்பி ஆகும். 6 வேக டிசிடி (dual-clutch transmission -DCT) தானியங்கி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
1.5 லிட்டர் டீசல் பொருத்தப்படிருக்கும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
காம்பேக்ட் செடான் சந்தையில் விற்பனையில் உள்ள போட்டியாளர்கள் டிசையர் , அமேஸ் , எக்ஸ்சென்ட் மற்றும் ஸெஸ்ட் ஆகும்.
ஃபிகோ ஆஸ்பயர் கார் விலை ரூ.5.20  முதல் 7.80 லட்சத்திற்க்குள் இருக்கலாம். வரும் ஜூன் மாதம் விற்பனைக்கு வரவுள்ளது.
மேலும் படிக்க 
ஃபோர்டு அவசரகால உதவி 
Exit mobile version