விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய ஃபோர்டு ஃபிகோ எஸ் மாடலில் ஸ்போர்ட்டிவ் சார்ந்த வசதிகளை பெற்றதாக விளங்கும். தோற்றத்தில் சில மாற்றங்களுடன் எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இருக்காது.

ஃபோர்டு ஃபிகோ எஸ்

  • ஸ்போர்ட்டிவ் வெர்ஷனாக ஃபோர்டு ஃபிகோ வரவுள்ளது.
  • எஞ்சின் பவர் மற்றும் ஆற்றல் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இடம்பெறாது.
  • கருப்பு வண்ண இன்டிரியருடன் கூடுதல் வசதிகளை பெற்றதாக விளங்கும்.

இணையத்தில் வெளிவந்துள்ள புதிய ஃபோர்டோ ஃபிகோ எஸ் மாடலின் முன்புறத்தில் தேன்கூடு கிரிலை போன்ற தோற்ற அமைப்புடன் , ஸ்மோக்ட் ஹெட்லைட் , 15 அங்குல அலாய் வீல், பக்கவாட்டில் பாடி கிளாடிங் வசதியுடன் கூடிய எஸ் பேட்ஜ் இடம்ப்பெற்றுள்ளது.

இன்டிரியரில் கருப்பு வண்ணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட டேஸ்போர்டு மற்றும் இருக்கைகளை பெற்றதாக ஃபிகோ எஸ் கார் விளங்கும். டாப் டைட்டானியம் வேரியன்டில் மட்டுமே இடம்பெற உள்ள இந்த வேரியன்டில் 88hp ஆற்றலை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 100hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும் கிடைக்க உள்ளது.

சாதரன மாடலை விட ரூ. 25,000 முதல் ரூ.40,000 வரை விலை கூடுதலாக ஃபோர்டு ஃபிகோ எஸ் விலை அமைய வாய்ப்புள்ளது. ஃபிகோ தவிர இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள செடான் ரக மாடலான ஆஸ்பயர் காரிலும் ஸ்போர்ட்டிவ் வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பட உதவி – fb/group/ecosport