2016 ஃபோர்டு என்டெவர் எஸ்யூவி அறிமுகம்

2016 ஃபோர்டு என்டெவர் எஸ்யூவி காரின் இந்திய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஃபோர்டு என்டெவர் எஸ்யூவி வரும் 2016 ஜனவரி மாத மத்தியில் விற்பனைக்கு வர வாய்ப்புகள் உள்ளது.

 

புதிய ஃபோர்டு என்டெவர் காரில் இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷனுடன் இரண்டு விதமான வேரியண்டில் ஆட்டோமேட்டிக் மற்றும் மெனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வரவுள்ளது. மேலும் ஆல் வீல் டிரைவ் மற்றும் 2 வீல் டிரைவ் ஆப்ஷனிலும் வருகின்றது.

முந்தைய மாடலில் இருந்து முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட மிக சிறப்பான தோற்ற பொலிவுடன் மிக கம்பீரமாக என்டெவர் காட்சியளிக்கின்றது. உட்புறத்தில் பல நவீன வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களை கொண்டிருக்கின்றது.

ஃபோர்டு என்டெவர் என்ஜின்

ஃபோர்டு என்டெவர் எஸ்யூவி காரில் 2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் என் இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷன் உள்ளது.

160 பிஎஸ் ஆற்றலை வழங்கும் 2198 சிசி TDCI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 385என்எம் ஆகும். இதில் 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் என இருவிதமான கியர் ஆப்ஷனில் உள்ளது.

 

200 பிஎஸ் ஆற்றலை வழங்கும் 3198 சிசி TDCI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 450என்எம் ஆகும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷனில் மட்டுமே உள்ளது.

2.2 லிட்டர் என்ஜினில் 2 வீல் டிரைவ் மற்றும்  ஆல் வீல் டிரைவ் உள்ளது. அதுவே 3.2 லிட்டர் என்ஜினில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் மட்டுமே உள்ளது.

மேலும் வாசிக்க ; ஃபோர்டு என்டெவர் எஸ்யூவி காரின் படங்கள்

வேரியண்ட்

ஃபோர்டு எண்டேவர்  2.2L 4×2 MT Trend

ஃபோர்ட் என்டெவர்  2.2L 4×2 AT Trend

ஃபோர்டு எண்டேவர்  2.2L 4×4 MT Trend

ஃபோர்டு எண்டேவர் 2.2L 4×2 AT Titanium

ஃபோர்டு எண்டேவர் 3.2L 4×4 AT Trend

ஃபோர்டு எண்டேவர்  3.2L 4×4 AT Titanium

சிறப்பம்சங்கள்

அனைத்து வேரியண்டிலும்  முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , இபிடி , இஎஸ்பி என்ஜின் இம்மொபைல்ஸர் , டிராக்‌ஷன் கன்ட்ரோல் , மலையேற உதவி , ஃபோர்டு மை கீ , ஃபோர்டு சிங்க் இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம் , ரீமோட் கீலெஸ் என்ட்ரி , ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் போன்றவை நிரந்தர அம்சமாக உள்ளது.

டாப் வேரியண்டில் பக்கவாட்டு , கர்டைன் , முழங்கால் காற்றுப்பை என மொத்தம் 7 காற்றுப்பைகள்  , சூரிய மேற்கூறை , எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்கு , தானியங்கி ஹெட்லைட்  போன்றவை உள்ளது. மேலும் ஆல் வீல் டிரைவ் மாடல்களில் டெர்ரெயின் மேனேஜ்மென்ட் சிஸ்டம் உள்ளது.

7 இருக்கைகளை கொண்டிருக்கும் என்டெவர் எஸ்யூவி காரில் சிவப்பு , கிரே , கருப்பு , சில்வர் , வெள்ளை மற்றும் புரோன்ஸ் என 6 வண்ணங்களில் கிடைக்கும்.

[envira-gallery id=”4677″]

Exit mobile version