ஃபோர்ஸ் மோட்டார்சின் புதிய என்ஜின் ஆலை திறப்பு – சக்கன்

இந்தியாவின் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களுக்கான என்ஜின் மற்றும் முன் , பின் ஆக்சில்கள் தயாரிப்புக்கான ஆலையை புனே அருகேயுள்ள சக்கன் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது.

Force-Motors-engine-plant-chakkan

 

நேற்று நடைபெற்ற திறப்பு விழாவில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர்  திரு. பிரகாஷ் ஜவடேகர் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் என்ஜின் மற்றும் ஆக்சில் தயாரிப்பு  ஆலையை திறந்து வைத்தார். ஆண்டுக்கு 20,000 என்ஜின்கள் , இதே எண்ணிக்கையிலான முன் மற்றும் பின் ஆக்சில்கள் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களுக்காக தயாரிக்கப்பட உள்ளது.

ரூ.100 கோடிமுதலீட்டில் 1,30,000 சதுர அடி பரப்பளவில் தொடங்கப்பட்டுள்ள தொழிற்சாலையில் அடுத்த இரு வருடங்களில் ரூ.700 கோடி வரை முதலீடு செய்ய ஃபோர்ஸ் திட்டமிட்டுள்ளது. மேலும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவன தேவைக்கேற்ப என்ஜின் மற்றும் ஆக்சில் உற்பத்தியை அதிகரிக்கும் திறனை கொண்டதாகும். ஃபோர்ஸ் சக்கன் தொழிற்சாலையில் பென்ஸ்   கார்களுக்கான 4 மற்றும் 6 (V6) சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் தயாரிக்கப்பட உள்ளது. மேலும் முன்பக்கம் மற்றும் பின்பக்க ஆக்சில்கள் தயாரிக்கவும் உள்ளது.

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்துக்கு கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக பலதரப்பட்ட என்ஜின் மற்றும் பாகங்களை தயாரித்து வருகின்றது.கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மெர்சிடிஸ் கார்களுக்கு இதுவரை 60,000 என்ஜின்கள் மற்றும் 50,000 ஆக்சில்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.

 

மேலும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் சென்னையில் அமைந்துள்ள  பிஎம்டபுள்யூ தொழிற்சாலைக்கு சென்னையில் என்ஜின்கள் தயாரித்து வருகின்றது.

[irp posts=”2901″ name=”சென்னையில் பிஎம்டபிள்யூ என்ஜின் தயாரிப்பு”]

டெல்லி மற்றும் கேரளாவில் சில மாவட்டங்களில் தொடரும் டீசல் என்ஜின் 2000சிசி மற்றும் அதற்க்கு மேற்பட்ட டீசல் என்ஜினுக்கு தடை குறித்து  திறப்பு விழாவில் பங்கேற்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர்  திரு. பிரகாஷ் ஜவடேகர் பேசுகையில் புதிய மாசு உமிழ்வு தரக்கொள்கை கொண்ட டீசல் என்ஜின்கள் மிகவும் குறைந்த அளவிலான மாசு உமிழ்வினை வெளியிடுகின்றது. அவற்றை தடை செய்துள்ளது தவறான அனுகுமுறை எனவும் பழைய வாகனங்களை தடை செய்வதே மாசு உமிழ்வினை குறைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version