Automobile Tamilan

அதிக மைலேஜ் தரும் டாப் 10 பைக்குகள்

இந்தியாவில் விற்பனையில் உள்ள பைக்குகளில் அதிக மைலேஜ் தரும் டாப் 10 பைக் மைலேஜ் விவரங்களை தெரிந்து கொள்வோம்.

மிக அதிகப்படியான மைலேஜ் தரக்கூடிய பைக்குகளுக்கு நம் சந்தையில் என்றுமே தனி மதிப்பு உள்ளது. புதிய சோதனை விதிப்படி உலகின் அதிக மைலேஜ் தரும் பைக்காக ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் பெயர் பெற்றுள்ளது.

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட்

ஹீரோ நிறுவனத்தின் ஐ3எஸ் நுட்பத்தின் மூலம் அதிகப்படியான மைலேஜ் இலகுவாக கிடைப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐ3எஸ் என்றால் ஐடில் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் சிஸ்டம். (i3S -Idle Stop and Start System) ஆனது போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் பயணிக்கும் பொழுது அக்சிலேரட்டர் கொடுக்காமல் இருக்கும்பொழுது வாகனம் தானாகேவே அனைந்துவிடும். கிளட்ச் மேல் நாம் கையை வைத்து இயக்கினால் தானாக வாகனம் இயங்க துவங்கும். இதனால் மைலேஜ் அதிகரிக்கின்றது.

டாப் 10 மைலேஜ் பைக்குகள்

 

1. ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட்

உலகின் அதிக மைலேஜ் தரும் பைக் என்ற பெயருடன் வலம் வர தொடங்கியுள்ள ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் பைக்கில் 97.2சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 7.8பிஎஸ் மற்றும் டார்க் 8.4என்எம் ஆகும்.

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் பைக் மைலேஜ் லிட்டருக்கு 102.5 கிமீ ஆகும்.

 

2. பஜாஜ் பிளாட்டினா ES

 
பஜாஜ் பிளாட்டினா இஎஸ் (எலக்ட்ரிக் ஸ்டார்ட்) பைக்கில் 102சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 8பிஎச்பி மற்றும் டார்க் 8.7என்எம் ஆகும்.

பஜாஜ் பிளாட்டினா ES பைக் மைலேஜ் லிட்டருக்கு 96.90 கிமீ ஆகும்.

3. டிவிஎஸ் ஸ்போர்ட் 

டிவிஎஸ் ஸ்போர்ட் டியூரோ லைஃப் பைக்கில் 99.7சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

டிவிஎஸ் ஸ்டார் ஸ்போர்ட் டியூரோ லைஃப் பைக் மைலேஜ் லிட்டருக்கு 95 கிமீ ஆகும்.

4. ஹீரோ  ஸ்பிளென்டர் புரோ

ஹீரோ  ஸ்பிளென்டர் புரோ பைக்கில் 97.2சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 7.8பிஎஸ் மற்றும் டார்க் 8.4என்எம் ஆகும்.

ஹீரோ  ஸ்பிளென்டர் புரோ பைக் மைலேஜ் லிட்டருக்கு 93.21 கிமீ ஆகும்.

5. ஹீரோ  ஸ்பிளென்டர் புரோ கிளாசிக்

ஹீரோ  ஸ்பிளென்டர் புரோ கிளாசிக் பைக்கில் 97.2சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 8.36பிஎஸ் மற்றும் டார்க் 8.05என்எம் ஆகும்.

ஹீரோ  ஸ்பிளென்டர் புரோ கிளாசிக் பைக் மைலேஜ் லிட்டருக்கு 93.21 கிமீ ஆகும்.

 6. பஜாஜ் டிஸ்கவர் 100

பஜாஜ் டிஸ்கவர் 100 பைக்கில் 94.4சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 7.8பிஎஸ் மற்றும் டார்க் 8.4என்எம் ஆகும்.

பஜாஜ் டிஸ்கவர் 100 பைக் மைலேஜ் லிட்டருக்கு 90.30 கிமீ ஆகும்.

7. ஹீரோ ஸ்பிளென்டர் NXG

ஹீரோ  ஸ்பிளென்டர் என்எக்ஸ்ஜி பைக்கில் 97.2சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 7.8பிஎஸ் மற்றும் டார்க் 8.4என்எம் ஆகும்.

ஹீரோ  ஸ்பிளென்டர் NXG பைக் மைலேஜ் லிட்டருக்கு 89.04 கிமீ ஆகும்.

8. ஹீரோ HF-டான்

ஹீரோ  எச்எஃப்-டான் பைக்கில் 97.2சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 7.8பிஎஸ் மற்றும் டார்க் 8.4என்எம் ஆகும்.

ஹீரோ HF-டான் பைக் மைலேஜ் லிட்டருக்கு 88.56 கிமீ ஆகும்.

9. ஹீரோ HF-டீலக்ஸ்

ஹீரோ  எச்எஃப்-டீலக்ஸ் பைக்கில் 97.2சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 8.36பிஎஸ் மற்றும் டார்க் 8.05என்எம் ஆகும்.

ஹீரோ HF-டீலக்ஸ் பைக் மைலேஜ் லிட்டருக்கு 88.56 கிமீ ஆகும்.

10. ஹீரோ HF-டீலக்ஸ் ஈக்கோ

ஹீரோ  எச்எஃப்-டீலக்ஸ் ஈக்கோ பைக்கில் 97.2சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 7.8பிஎஸ் மற்றும் டார்க் 8.4என்எம் ஆகும்.

ஹீரோ  HF-டீலக்ஸ் ஈக்கோ பைக் மைலேஜ் லிட்டருக்கு 88.56 கிமீ ஆகும்.

இதுவரை பத்தாமிடத்தில் இருந்த டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் மூன்றாம் இடத்திற்க்கு முன்னேறியுள்ளது.

மேலும் படிக்க ; டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் மைலேஜ் லிட்டருக்கு 95கிமீ

இந்த புதிய மைலேஜ் விவரங்கள் மத்திய அரசின் சர்வதேச ஆட்டோமொபைல் மையத்தால் (iCAT – International Centre for Automotive Technology)  கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version