பிரசத்தி பெற்ற சொகுசு கார் தயாரிப்பாளரான ஆடி நிறுவனம் புதிய ஆடி க்யூ8 (Q8) எஸ்யூவி கான்செப்ட் மாடலை டெட்ராய்ட் ஆட்டோ கண்காட்சி அரங்கில் முதன்முறையாக காட்சிப்படுத்தியுள்ளது.

விற்பனையில் உள்ள க்யூ7 எஸ்யூவி காருக்கு மேலாக நிலை நிறுத்தப்பட உள்ள க்யூ8 காரில் பிளக் இன் ஹைபிரிட் என்ஜின் ஆப்ஷனை பெற்ற மாடலாக பென்டைகா ,உரஸ் , கேயேன் போன்றே ஃபோக்ஸ்வகேன் குழுமத்தின் உயர்ரக எஸ்யூவி மாடலாக க்யூ8 விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மிக பிராமாண்டமான தோற்ற அமைப்பினை வெளிப்படுத்தியுள்ள க்யூ8 காரில் 4 இருக்கைகளை கொண்டு இருப்பதுடன் மிக தாரளமான இடவசதியுடன் பல்வேறு நவீன வசதிகளை பெற்ற மாடலாக விளங்கும். வெளியிடப்பட்டுள்ள கான்செப்ட் மாடலில் ஆடி நிறுவனத்தின் பாரம்பரிய கிரில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு அதில் 6 செங்குத்தான கிரில்கள் இடம்பெற்றுள்ளது. பக்கவாட்டில் 23 அங்குல அலாய் வீல் இடம்பெற்றுள்ளது.

ஆடி க்யூ8 காரில் 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு வி6 பிளக் இன் ஹைபிரிட் என்ஜினை பெற்றிருக்கும். இதன் என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் இணைந்து 442 குதிரைசக்தி ஆற்றல் மற்றும் 694 நியூட்டன்மீட்டர் டார்க் வெளிப்படுத்தும். இதில் 4 சக்கரங்களும் ஆற்றலை எடுத்து செல்ல 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். ஆடி க்யூ8 காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ ஆக இருக்கும். மேலும் 0 முதல் 100 கிமீ வேகத்தை 5.4 விநாடிகளில் எட்டிவிடும்.

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் உற்பத்திக்கு செல்ல உள்ள க்யூ8 கார் சர்வதேச அளவில் 2018 முதல் கிடைக்க உள்ளதால் இந்தியாவிலும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

ஆடி Q8 கான்செப்ட் படங்கள்

படங்கள் எண்ணிக்கை -23

[foogallery id=”15195″]