ஆடி முதன்மை இடத்தை கைப்பற்றியது

சொகுசு கார் பிரிவில் ஆடி நிறுவனம் பிஎம்டபிள்யூ நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் இரண்டாம் இடத்தை கைப்பற்றியுள்ளது. ஆனால் பிஎம்டபிள்யூ மூன்றாம் இடத்திற்க்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆரம்ப காலகட்டங்களில் சொகுசு கார் விற்பனையில் பென்ஸ்தான் முதன்மையாக விளங்கிவந்தது. 2010 ஆம் ஆண்டு முதல் பிஎம்டபிள்யூ முதலிடத்தினை கைப்பற்றியது.

நடப்பு வருடத்தில் முதல் 3 மாதங்களில் விற்பனையான கார்களின் எண்ணிக்கையை வைத்து ஆடி முதலிடத்தினை கைப்பறியதாக சியாம் வெளியிட்டுள்ளது.

ஆடி கார்

ஆடி

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தை தலைமையாக கொண்டு செயல்படும் ஆடி நிறுவனம் 2616 கார்களை விற்பனை செய்துள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2009 கார்களை விற்பனை செய்துள்ளது.

 பிஎம்டபிள்யூ

 பிஎம்டபிள்யூ நிறுவனம் 1465 கார்களை விற்பனை செய்துள்ளது. இவற்றில் மினி பிராண்டின் கார்களும் அடங்கும். மினி பிராண்டில் 55 கார்களை விற்றுள்ளது. இது கடந்த ஆண்டின் முதல் மூன்று மாத விற்பனையை விட 40.5 % சரிவாகும். இது பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்க்கு மிகப் பெரிய சரிவாகும்.

மூன்று மாதங்களை வைத்து மட்டும் முதன்மை இடத்தினை உறுதி செய்வது சற்று கடினம்தான். இந்த வருடத்தின் இறுதியில்தான் முதன்மை இடத்தை கைப்பற்றப்போவது யார் என உறுதியாகும்.

இதனால் மிக பெரும் சரிவினை சந்தித்துள்ள பிஎம்டபிள்யூ மற்றும் பென்ஸ் நிறுவனங்கள் குறைந்த விலை சொகுசு கார்களை களமிற்றக்க திட்டமிட்டுள்ளன. இந்த கார்களின் விலை ரூ 20 இலட்சத்திற்க்குள் இருக்கும். மேலும் மினி பிராண்டின் கார்கள் இந்தியாவிலே அசெம்பிள் செய்யப்படுவதனால் பிஎம்டபிள்யூக்கு  மினி பிராண்டிலும் விற்பனை அதிகரிக்கும்.

வால்வோ மற்றும் ஜாகுவார் போன்ற நிறுவனங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

Exit mobile version