Automobile Tamilan

இஞ்ஜின் ஆயுளை அதிகரிக்க எளிமையான டிப்ஸ்

எந்தவொரு இஞ்ஜின் ஆயுளை அதிகரிக்க வேண்டுமெனில் மிக சரியான காலத்தில் முறையான பாரமரிப்பினை மேற்கொள்வது மிக அவசியமாகும். தயாரிப்பாளரின் அறிவுரையின் அடிப்படையில் இஞ்ஜின் பராமரிப்பு செய்தால் ஆயுள் அதிகரிக்கும்.

C 63 AMG Edition 507 (C 204) Lack: designo magno platin, Aussatttung: designo Leder porzellan, 2013

முறையான பராமரிப்பு உள்ள கார்கள் பல வருடங்கள் கடந்தாலும் புதிய கார்ளுக்கு ஈடுகொடுக்கும் வகையிலான  செயல்திறனையே தொடர்ந்து வெளிப்படுத்தும். ஆனால் முறையற்ற பராமரிப்பு எதிர்பாராத பழுது , இஞ்ஜின் ஆயுள் குறைவு மற்றும் கூடுதல் செலவினை ஏற்படுத்தும்.

1.சுத்தமான இஞ்ஜின் அறை

இஞ்ஜின் அறையை வாரம் ஒருமுறை சோதனை செய்து இஞ்ஜின் அறையின் மேற்பகுதி மற்றும் அடிப்பகுதியல் உள்ள மன் , தூசு போன்றவற்றை அகற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மிக வேகமாக என்ஜின் அறையில் தண்ணீரை பீச்சி அடிக்ககூடாது .   ஏன் என்றால் பெரும்பாலான என்ஜின் எலக்ட்ரானிக்ஸ் உள்ள பகுதி என்பதனால் மிக கவனமாக இருக்கு வேண்டும். என்ஜின் அறையில் எவ்விதமான துருவும் அன்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

2.  இஞ்ஜின் ஆயில் மற்றும் கூலன்ட்

பல லட்சம் கிலோ மீட்டர்கள் சோதனை செய்த பின்னரே தயாரிப்பாளர்கள் என்ஜின் ஆயில் மாற்றுவதற்கான முறையான கால இடைவெளியினை வகுக்கின்றார்கள். உதாரணத்திற்கு 10,000 கிமீக்கு ஒருமைற என்ஜின் ஆயுளை மாற்ற வேண்டும் என தயாரிப்பாளர் கூறியிருந்தால் 10,250 கிமீக்கு உள்ளாகவே என்ஜின் ஆயிலினை மாற்ற வேண்டும். மேலும் ஒரு முக்கியமான விடயம் தயாரிப்பாளர் பரிந்துரைக்கும் என்ஜின் ஆயிலை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இரு வாரத்திற்கு ஒரு முறை என்ஜின் ஆயில் அளவினை காலை நேரங்களிலோ அல்லது அதிகநேரம் வாகனம் நின்று என்ஜின் ஆயில் குளிர்ந்த நிலையிலோ சோதனை செய்வது அவசியம்

எஞ்ஜினை குளிர்விப்பதில் முக்கிய பங்காற்றும் கூலன்ட் வாட்டரினை மிக சரியான அளவினை தெரிந்து கொண்டு அதற்கேற்ப பராமரித்தல் அவசியம் என்ஜின் வெப்பம் அதிகரித்தால் இஞ்ஜின் ஆயுளை குறைக்கும். நீரினை கூலண்ட் வாட்டரில் கலப்பதனை தவிர்க்க வேண்டும். கூலண்ட் வாட்டர் என்ஜின் உட்புற பிளாக்கில் துருபிடிக்காமல் தடுக்கும்.

3. இஞ்ஜின் பராமரிப்பு

இஞ்ஜின் ஆயில் , கூலண்ட் மட்டுமல்லாமல் காற்றினை உள்ளிழுக்கும் காற்று பில்டர் முறையாக கால இடைவெளியில் மாற்றம் வேண்டும். மேலும் ஒவ்வொரு 5000 கிமீக்கு ஒருமுறை சுத்தம் செய்வது நல்ல பலனை தரும்.  ஏசி பில்டரினை முறையான கால இடைவெளியில் மாற்றப்பட வேண்டும்.

மேலும் படிங்க ; புதிய பைக் பராமரிப்பு குறிப்புகள்

4. இஞ்ஜின் வேகத்தினை அதிகரிக்கும் முறை

காலை நேரங்களிலோ அல்லது அதிக இடைவெளிக்கு பின்னர் வாகனத்தினை இயக்க தொடங்கினால் வேகத்தினை படிப்படியாக அதிகரியுங்கள். முதல் 2 கிமீ முதல் 4 கிமீ வரை மிக வேகமாக இயக்காமல் அதிகமாக ஆக்சிலரேட்டர் பெடலினை கொடுக்கமால் என்ஜின் வெப்பம் படிப்படியாக உயரும் வரை சீரான வேகத்தில் பயணிக்க வேண்டும். அதிரடியாக அதிகப்படியான ஆக்சிலரேட்டர் கொடுக்கும் பொழுது என்ஜின் வெப்பம் மிக வேகமாக அதிகரிக்கும் பட்சத்தில் என்ஜின் பிளாக் சுவர்கள் பாதிக்கும்.

5. கியர் மாற்றம்

என்ஜின் ஆற்றலை சக்கரங்களுக்கு கடத்தும் டிரான்ஸ்மிஷன் பாக்சினை முறையாக இயக்குவது மிகவும் நல்லதாகும். தானியங்கி கியர்பாக்ஸ்களில் வேகத்திற்கு ஏற்ற செயல்முறையை தானாகவே தேர்ந்தெடுக்கும்.ஆனால் மெனுவல் கியர்பாக்சில் சரியான கியரில் முறையான வேகத்துடன் செல்வது நல்லதாகும்.

மேலும் படிங்க ; பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும்

 

 

Exit mobile version