Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

டொயோட்டா இனோவா கிறிஸ்டா டூரிங் ஸ்போர்ட் விரைவில்

By MR.Durai
Last updated: 15,March 2017
Share
SHARE

பிரசத்தி பெற்ற டொயோட்டா இனோவா காரின் புதிய இனோவா கிறிஸ்டா காரை அடிப்படையாக கொண்ட கூடுதல் வசதிகளை பெற்ற டூரிங் ஸ்போர்ட் மாடல் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

இனோவா கிறிஸ்டா டூரிங் ஸ்போர்ட்

  • இந்தோனசியா சந்தையில் இனோவா வென்ச்சுரர் என அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாடலை அடிப்பையாக கொண்டதே டூரிங் ஸ்போர்ட் மாடலாகும்.
  • பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளில் டாப் ZX வேரியன்டில் மட்டுமே கிடைக்கலாம்.
  • சாதாரன மாடலை விட ரூ.60,000 முதல் ரூ.70,000 வரை விலை கூடுதலாக அமைந்திருக்கும்.

இந்திய எம்பிவி ரக சந்தையில் பல ஆண்டுகளாக முடிசூடா மன்னாக விளங்கும் இனோவா காரில் 150hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.4லிட்டர் என்ஜின் டார்க் 343 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 2.4 லிட்டர் இன்னோவா க்ரீஸ்ட்டா மைலேஜ் லிட்டருக்கு 15.10 கிமீ ஆகும்.

174hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.8 லிட்டர் என்ஜின் டார்க் 360 Nm ஆகும். இதில்  6 வேக ஆட்டோமேட்டிக் இடம் பெற்றிருக்கும். 2.8 லிட்டர் இன்னோவா க்ரீஸ்ட்டா மைலேஜ் லிட்டருக்கு 14.29 கிமீ ஆகும்.

166 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.7 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் டார்க் 245Nm ஆகும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் மற்றும் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

மொத்தம் மூன்று விதமான என்ஜின் தேர்வுகளில் கிடைக்கின்ற கிறிஸ்டாவின் டாப் வேரியன்ட் என்ஜின் 2.7 லிட்டர் மற்றும் 2.8 லிட்டர் ஆப்ஷனை அடிப்படையாக கொண்ட டூரிங் ஸ்போர்ட் மாடலில் தோற்ற அமைப்பில் கருப்பு நிற அலாய் வீல் , பாடி கிளாடிங் போன்ற கூடுதலான வசதிகளை பெற்றதாகவும் , இன்டிரியரில் கவர்ச்சிகரமான வண்ணங்களை பெற்றதாகவும் விளங்கும்.

அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற 6 இருக்கைகள் கொண்ட டூரிங் ஸ்போர்ட் பிரிமியம் ரக அனுபவத்தை கூடுதலாக வழங்கும் வகையில் அமைந்திருக்கும்.

*கொடுக்கப்பட்டுள்ள படங்கள் இன்னோவா வென்ச்ரர் இந்தோனசியா மாடலாகும்.

renault lodgy
2022க்கு முந்தைய ரெனால்ட் வாகனங்கள் E20 பெட்ரோலுக்கு ஏற்றதல்ல.!
350cc+ மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % ஜிஎஸ்டி வரி.?
நியோ ஹைரேஞ்ச் எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷாவை வெளியிட்ட ஆய்லர் மோட்டார்
வரவிருக்கும் டிவிஎஸ் மோட்டாரின் மூன்று இருசக்கர வாகனங்கள் விவரம்
BE6 பேட்மேன் 999 யூனிட்டுகளை விற்று தீர்த்த மஹிந்திரா
TAGGED:Toyota
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
honda activa e electric scooter review
Honda Bikes
ஹோண்டா ஆக்டிவா e எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 Royal Enfield bullet 350 logo
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
சுசூகி ஜிக்ஸர் sf 155
Suzuki
2025 சுசூகி ஜிக்ஸர் SF 155 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்
Ather energy
2025 ஏதெர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms