Site icon Automobile Tamilan

இன்ஜின் இயங்குவது எப்படி பகுதி-3

ஆட்டோமொபைல் இன்ஜின் இயங்குவது எப்படி பகுதி 3யில் உட்புற என்ஜின்  (internal combustion engine) பிரிவுகளை கான்போம்.   இந்த தொடரின் 3வது பகுதியில் உள்ள SI Engine மற்றும் CI Engine பற்றி அறிந்துகொள்ளலாம்.

Engine News in Tamil


SI Engine:

 SI Engine என்றால் Spark Ignition Engine அதாவது தீப்பொறி மூலம் எரிபொருள் எரிந்து என்ஜின்க்கு இயக்க ஆற்றலை கிடைக்கும். இதன் மூலம் வாகனம் இயங்கும்.
தீப்பொறி எவ்வாறு  கிடைக்கும் என்றால் spark plug மூலம் கிடைக்கும். ஸ்பார்க் ப்ளாக் என்றால் என்ன எவ்வாறு இயங்கும் என்பதை  என்ஜின் பாகங்கள் பகுதியில் கான்போம்.
SI engine
SI Engine என்றால்  என்ன மிக எளிமையாக அறிய பெட்ரோல்  மூலம் இயங்கும் என்ஜின்கள் SI Engine ஆகும்.
CI Engine:
 CI Engine  என்றால் Compression Ignition Engine அதாவது மிகுந்த அழுத்ததுடன் இருக்கும் காற்றில் எரிபொருளை தெளிக்கும் பொழுது எரிபொருள் எரிந்து என்ஜின்க்கு இயக்க ஆற்றலை கிடைக்கும். இதன் மூலம் வாகனம் இயங்கும்.
எரிபொருள் எவ்வாறு தெளிக்கப்படும் என்றால் Injector மூலம் மிகுந்த அழுத்ததுடன்(High Pressure)  எரிபொருள்  தெளிக்கப்படும்.
CI Engine என்றால்  என்ன மிக எளிமையாக அறிய   டீசல் மூலம் இயங்கும் என்ஜின்கள் CI Engine ஆகும்.

எதனால் பெட்ரோல் என்ஜின்க்கு  ஸ்பார்க் ப்ளாக் டீசல் என்ஜின்க்கு Injector

Self  Ignition Temperature எனப்படும் தீ பற்றும் வெப்பநிலை
 பெட்ரோல்: 246 °C 
 டீசல்: 210°C
மேலும் படிக்க ; என்ஜின் இயங்குவது எப்படி 1 / என்ஜின் இயங்குவது எப்படி 2
Exit mobile version