Automobile Tamilan

இன்னோவா க்ரீஸ்டா 4 நட்சத்திர மதிப்பீடு – ASEAN NCAP

டொயோட்டா இன்னோவா க்ரீஸ்டா எம்பிவி கார் ஏசியான் கிராஷ் டெஸ்ட் (ASEAN NCAP) சோதனையில் 4 நட்சத்திர மதிப்பெண்களை பெற்றுள்ளது. இன்னோவா க்ரீஸ்டா ( Innova Crysta) இந்தோனேசியா மாடல் சோதனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

toyota-innova-crysta-mpv

 

குழந்தைகள் பாதுகாப்பில் 76 % வயது வந்தோர் பாதுகாப்பில் 5 நட்சத்திரங்களையும் பெற்றுள்ளது. சோதனை செய்யப்பட்ட பேஸ் வேரியண்டில் எலக்ட்ரானிக் ஸ்டேபிளிட்டி கன்ட்ரோல் ஆப்ஷன் இல்லாத காரணத்தால் இன்னோவா க்ரீஸ்டா 4 நட்சத்திர மதிபீட்டை பெற்றுள்ளது.

மாடல் விபரம்

வேரியண்ட் : 2.0S MT
தயாரிப்பு வருடம் : 2015
மாடல் வருடம் : 2016
வாகன பிரிவு : MPV
இஞ்ஜின் : 2.0L PETROL
KERB MASS : 1698 கிலோ

இஎஸ்சி  ( எலக்ட்ரானிக் ஸ்டேபிளிட்டி கன்ட்ரோல் ) இல்லாத பேஸ் வேரியண்டில் குழந்தை பயணிகள் பாதுகாப்பில் 76 சதவீத பாதுகாப்பினை உறுதி செய்கின்றது. வயது வந்தோர் பாதுகாப்பில் 16.00 மதிபெண்களுக்கு  14.10 மதிபெண் பெற்றுள்ளது.

இஎஸ்சி உள்ள டாப் வேரியண்டில் குழந்தை பயணிகள் பாதுகாப்பில் 76 சதவீத பாதுகாப்பினை உறுதி செய்கின்றது. வயது வந்தோர் பாதுகாப்பில் 16.00 மதிபெண்களுக்கு  14.10 மதிபெண் பெற்றுள்ளது. எனவே இதன் வயது வந்தோர் பாதுகாப்பில் 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளது.

குழந்தை பயணிகள் பாதுகாப்பில் 76 % பெற்றுள்ள காரணத்தால் ஒட்டுமொத்த நடசத்திர மதிப்பு புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா க்ரீஸ்டா காருக்கு 5 நட்சத்திரங்களுக்கு 4 நட்சத்திரங்களை பெற்றுள்ளதாக ஏசியான் என்ஏசிபி மையம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் பார்வைக்கு வந்த டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா அடுத்த சில மாதங்களில் இந்திய சந்தைக்கு வரவுள்ளது.

Exit mobile version