Automobile Tamil

உலகின் மிக நீளமான சர்வதேச நெடுஞ்சாலை : பேன் அமெரிக்கன் ஹைவே

உலகின் மிக நீளமான சர்வதேச நெடுஞ்சாலை என்ற பெருமைக்குரிய ஹைவே பேன் அமெரிக்கன் ஹைவே ஆகும்.  கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இந்த நெடுஞ்சாலையின் தூரம் 47,958 கிமீ ஆகும்.
பேன் அமெரிக்கன் ஹைவே

மிகவும் சவால்கள் நிறைந்த இந்த நெடுஞ்சாலை மொத்தம் 14 நாடுகளை அதிகாரப்பூர்வமாகவும் 9 நாடுகளை அதிகாரப்பூர்வமில்லாமலும் இணைக்கின்றது. எனவே மொத்தம் 23 நாடுகளை இணைக்கின்றது.

பேன் அமெரிக்கன் ஹைவே பின்னனி

1889 தொடங்கப்பட்ட முதல் பேன் அமெரிக்கன் கூட்டதொடரில் தொடங்கி மற்ற நாடுகளின் அனுமதி பெற்று மொத்த ஹைவே முழுசெயல்பாட்டுக்கு வருவதற்க்கு பல ஆண்டுகளை எடுத்துக்கொண்டது. ஒவ்வொரு 4 வருடத்திற்க்கு ஒருமுறை பேன் அமெரிக்கன் காங்கிரஸ் கூட்டம் நடைபெறுகின்றது.

[youtube https://www.youtube.com/watch?v=IPAomHDICX0]

பேன் அமெரிக்கன் நெடுஞ்சாலை

பேன் அமெரிக்கன் ஹைவே வட மெக்சிக்கோ நகரின் லெரெடோ பகுதியில் தொடங்கி அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் புவெனஸ் ஐரிஸ் நகரில் முடிவடைகின்றது.

கோடை காலங்களில் ஒரளவு முழுசாலையை பயன்படுத்தும் நிலையில் உள்ளதாம் ஆனால் மழைகாலங்களில் சில பகுதிகளை கடப்பது மிகவும் கடினமானதாக இருக்குமாம்.

கொலம்பியா மற்றும் பனாமா பகுதிகளுக்கு இடையில் உள்ள 100கிமீ தொலைவினை டெரியன் கேப் என அழைக்கின்றார்கள்.

[youtube https://www.youtube.com/watch?v=4prMtH3U-3Q]

டெரியன் கேப்

டெரியன் கேப் பகுதி மிக சவாலினை ஏற்படுத்தவல்ல பாதுகாப்பு இல்லாத பகுதியாக விளங்குகின்றது. இந்த பகுதியில் அதிகப்படியான சதுப்புநிலம் மற்றும் அடர்ந்த காடுகளை கொண்டு விளங்குகின்றது.  மிகவும் கடுமையான சவால்கள் நிறைந்த இந்த பகுதி அட்வென்ச்சருக்காக பயன்படுத்துகின்றனர்.

Image credits : பேன் அமெரிக்கன்

Exit mobile version