Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto NewsWired

அசல் ஓட்டுநர் உரிமம் குறித்து காவல்துறை விளக்கம்

By MR.Durai
Last updated: 1,September 2017
Share
SHARE

செப்டம்பர் 1ந் தேதி முதல் அனைத்து வாகன ஓட்டிகளும் அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டயாம் வைத்திருக்க வேண்டும், இல்லையெனில் 3 மாத சிறை அல்லது ரூ. 500 அபராதம் வாகன பறிமுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் தொடர்ந்த வழக்கில்   அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே வாகனச் சட்டப்பிரிவு 139-ன்படி ஓட்டுநர்கள், ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில் அசல் ஓட்டுநர் உரிமம் குறித்து காவல்துறை விளக்கமளித்துள்ளது.

அதன்படி, “அதிக வேகம், அதிக சுமை ஏற்றுதல், அதிக ஆட்களை ஏற்றிச் செல்லுதல், குடி போதையில் வாகனம் ஓட்டுதல், சிக்னலில் எல்லையைத் தாண்டுதல், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 6 குற்றங்களில் ஈடுபட்டால் மட்டுமே அசல் ஓட்டுநர் உரிமம் கேட்கப்படும்” என்று போக்குவரத்துக் காவல்துறை விளக்கமளித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும், இந்த ஆறு குற்றங்களில் ஈடுபட்டதாக, தமிழகத்தில் 52,064 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

 

அசல் ஓட்டுநர் உரிமம்

விபத்துகளை தடுக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட உள்ள அசல் ஓட்டுநர் உரிமம் கட்டயாம் என்ற நடவடிக்கையின் காரணமாக வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்துக்கு உள்ளாவர்கள் என பொதுவாக பலரும் கருதும் நிலையில், தொடர்ந்து பல்வேறு தரப்பினர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வரும் நிலையில் முறையான நடைமுறைகள் குறித்து அரசு தெளிவான விளக்கத்தை மக்களுக்கு வழங்க வேண்டிய கட்டயாத்தில் உள்ளது.

பலரும் டிஜிலாக்கர் குறித்து கருத்து கேட்டு வரும் நிலையில் டிஜிலாக்கரை ஏற்றுக்கொள்ளவது குறித்து அரசு எந்த அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.

சவால்கள் என்ன ?

ஒரிஜினல் லைசென்ஸ் தொலைந்து விட்டால், புதிய உரிமம் வாங்குவதற்கு உள்ள கடினமான நிலை உள்ளது. அதற்கான ஏராளமான நடைமுறைகள் உள்ளன. காலதாமதமும் ஏற்படும். அதுவரை வாகன ஓட்டிகள் எந்த வாகனத்தையும் ஓட்ட முடியாத நிலை ஏற்படும் என்பதனால் ஒரிஜனல் ஓட்டுநர் உரிமத்தை கட்டயாத்தை நீக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வாடகை வாகனம் ஓட்டும் கார், ஆட்டோ, லாரி ஓட்டுநர்களுக்கு அசல் உரிமம் நிறுவனங்கள் அல்லது உரிமையாளின் வசம் இருக்கும் என்பதனால் இது பலருக்கு மிகுந்த சிரமத்தை எற்படுத்தும். மேலும் விபத்துகளில் சிக்கினால் அசல் உரிமம் இல்லையென்றால் காப்பீடு பெறுவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்றாகும்.

தீர்வு என்ன ?

ஒட்டுநர் உரிமம் ஏதேனும் காரணத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தால் நகலை கொண்டு வாகனத்தை இயக்கும் காரணத்தாலே அசல் உரிமம் கட்டயாம் என அமைச்சர் அறிவித்துள்ளதால், இதற்கு டிஜிட்டல் சார்ந்த முறையில் தீர்வினை உருவாக்கியப் பின்னர் அசல் உரிமத்தை கட்டயாப்படுத்திருக்க வேண்டும்.

அசல் உரிமம் தொலைந்தால் உடனடியாக பெறுவதற்கு ஏற்ற வழிமுறைகளை உருவாக்கி தருவதற்கு அரசு நடைமுறையை மேற்கொள்ள வேண்டும்.

2025 BMW 2 Series Gran Coupe car
செப்டம்பர் 1 முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை 3% உயருகின்றது
கியா இந்தியாவில் சிரோஸ் EV விற்பனைக்கு அறிமுகம் செய்யுமா.!
75 நாடுகளில் ஒரு கோடி வேகன்ஆர் கார்களை விற்பனை செய்த சுசூகி
எத்தனால் கலந்த E20 பெட்ரோல் ஆபத்தில் கார்கள், பைக்குகள் ..!
பியாஜியோ அபே e-சிட்டி அல்டரா, FX மேக்ஸ் எலக்ட்ரிக் வெளியானது
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 யமஹா FZ-S Fi hybrid
Yamaha
2025 யமஹா FZ-S Fi ஹைபிரிட் பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
2025 tvs apache rtr 310
TVS
2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
hero-xpulse-200s-4v-pro-white
Hero Motocorp
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
Honda Shine 100 DX Pearl Igneous Black
Honda Bikes
ஹோண்டா ஷைன் 100DX விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved