Site icon Automobile Tamilan

சென்னையில் போர்டு குளோபல் டெக்னாலாஜி மற்றும் வர்த்தக மையம்

அமெரிக்காவின் ஃபோர்டு மோட்டார் நிறுவனம் சென்னையில் ரூ.1300 கோடி முதலீட்டில் புதிய ஃபோர்டு குளோபல் டெக்னாலாஜி மற்றும் வர்த்தக மையத்தை 28 ஏக்கர் பரப்பளவில் 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தனது செயல்பாட்டை இந்த மையம் தொடங்கும்.

சர்வதேச நுட்பம் மற்றும் வர்த்தக மையத்தின் வாயிலாக புதிய மாடல்கள் , மொபைலிட்டி தீர்வுகள் மற்றும் வர்த்தகரீதியான வளர்ச்சியை உள்நாட்டிலும் மற்றும் வெளிநாட்டிலும் ஏற்படுத்தும் நோக்கில் இந்த மையம் செயல்படும். இந்த புதிய மையத்தால் சுமார் 3000 பணியாளர்களை வேலை வாய்ப்பு ஏற்படும் என போர்டு தெரிவித்துள்ளது. இந்தியாவில் அமையவிருக்கும் இந்த மையம் செயல்பட தொடங்கும் பொழுது உலகில் போர்டு நிறுவனத்தின் இரண்டாவது மிகப்பெரிய தொழில்நுட்ப மையமாக செயல்படும்.

இந்த அறிவிப்பினை வெளியிட்டு போர்ட் தெரிவிக்கையில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் துடிப்பான சந்தை மட்டுமல்ல சிறப்பான தீர்வுகளை ஏற்படுத்தவும் , புத்தாக்க முயற்சிகளுக்கு ஏற்ற மிக வளமான அறிவு நிறைந்த ஆக்கபூர்வமான மையமாக திகழ்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு குளோபல் டெக்னாலாஜி மற்றும் வர்த்தக மையம் மிக சிறப்பான வசதிகளை கொண்டதாக நவீன புத்தாக்க வடிவ தாத்பரியங்களை கொண்ட கட்டிங்களை கொண்டதாக வடிவமைக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் மிக சிறப்பான இடவசதி கொண்ட இதில் இரண்டு முக்கிய அலுவலக கட்டிடங்கள் , அதிநவீன வை-ஃபை இனைப்புகள் , உணவகம் , ஓய்வறை ,யோகா மையம் , மருத்துவ வசதி என பலவற்றை பெற்றதாக விளங்கும்.

Exit mobile version