வரும் ஜனவரி 13ந் தேதி மாருதி சுஸூகி இக்னிஸ் காம்பேக்ட் ரக மினி எஸ்யூவி மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இக்னிஸ் இளை தலைமுறையினரை நோக்கி பயணிக்க உள்ளது.

இந்திய சந்தையில் முதன்முறையாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி அரங்கில் காட்சிக்கு வந்த மாருதி இக்னிஸ் கார் இந்திய மக்களின் அமோக ஆதரவினை பெற்றதுடன் இளைய தலைமுறை மற்றும் துதல் தலைமுறை கார் வாங்க விரும்புபவர்களுக்கு மிகவும் விருப்பமான பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இக்னிஸ் கார் பற்றிய அனைத்து விபரங்களும் முழுமையாக வெளிவந்துள்ள நிலையில் முறைப்படியான விவரங்கள் மற்றும் காரின் விலை விபரங்கள் நாளை வெளியிடப்பட உள்ளது. இக்னிஸ் நெக்ஸா ஷோரூம் வழியாக விற்பனை செய்யப்பட உள்ள மூன்றவது கார் மாடலாக விளங்குவதனால் பிரிமியம் தரத்திலான அம்சங்களை பெற்றதாக விளங்குகின்றது.

மேலும் படிக்க – மாருதி இக்னிஸ் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 10 தகவல்கள்

கேயூவி 100 காருக்கு எதிராக விற்பனைக்கு வருகின்ற சுஸூகி இக்னிஸ் காரில் பல்வேறு விதமான வசதிகளுடன் அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களான ஏபிஎஸ் , ஒட்டுநர் மற்றும் உடன் பயணிப்பவருக்கான ஏர்பேக் (காற்றுப்பை) நிரந்தரமாக இடம்பிடித்துள்ளது. நான்கு நிலை மாடலில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றதாக விளங்கும்.

டாக்சி சந்தைக்கும் ஏற்ற மாடலாக அடிப்படைய பேஸ் வேரியன்டான சிக்மா ஒதுக்கப்பட்டுள்ளதால் ஒலோ மற்றும் யூபர் மேலும் தனிநபர் டாக்சி உரிமையாளர்களும் பயன்படுத்திக் கொள்ள இயலும்.

சுஸூகி இக்னிஸ் விலை

புதிய சுஸூகி இக்னிஸ் மினி எஸ்யூவி காரின் விலை ரூ. 5.50 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் படிக்க – இக்னிஸ் காரின் மைலேஜ் விபரம்

இக்னிஸ் காரின் வேரியன்ட் விபரம் மற்றும் வசதிகள்