Automobile Tamilan

ஜிஎம் ஹலோல் தொழிற்சாலை உற்பத்தி தொடரும் – செவர்லே

அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ்  நிறுவனத்தின் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள செவர்லே ஆலையை 2016 ஆம் ஆண்டில் மூட திட்டமிட்டிருந்த நிலையில் அதனை அடுத்த வருடம் அதாவது மார்ச் 2017 ஆம் ஆண்டு வரை உற்பத்தி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

chevrolet-TAVERA

 

கடந்த வருடம் செவர்லே வெளியிட்டிருந்த முதலீடு திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில் ரூ.6400 கோடி முதலீட்டை படிப்படியாக அடுத்த 5 வருடங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தது. மேலும் அடுத்த 5 வருடங்களில் 10க்கு மேற்பட்ட கார் மாடல்களை புதிதாக விற்பனை செய்யும் இலக்கினை நிர்ணயித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக ட்ரெயில்பிளேசர் மற்றும் ஸ்பின் மாடல்கள் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவில் ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி விற்பனை தொடங்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் வெளியான அடுத்த 24 மாதங்கள் 5 செவர்லே கார்களில் ஸ்பின் எம்பிவி திட்டத்தை கைவிடுவதாக அறிவித்திருந்தது. தற்பொழுது கடந்த வருடத்தில் வெளியிட்டிருந்த செய்தியில் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள  ஹலோல் ஆலையை மூடிவிட்டு புனே அருகில் அமைந்துள்ள தாலேகான் ஆலையை மேம்படுத்த திட்டமிட்டிருந்த நிலையில் ஹலோல் ஆலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செவர்லே இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. கஹேர் காசிமின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேம்படுத்தப்பட்ட புதிய டவேரா எம்பிவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் மற்றும் புதிய பிஎஸ்-4 என்ஜின் போன்றவை பெற்ற மாடலாக விரைவில் விற்பனைக்கு வரவுள்ளதால் மேம்படுத்தப்பட்ட செவர்லே டவேரா உற்பத்தி செய்யப்பட ஹலோல் ஆலை பயன்படுத்த இயலும்.

[irp posts=”8013″ name=”செவர்லே பீட் , பீட் ஏக்டிவ் , எசென்சியா கார்கள் விரைவில்”]

மேலும் அவர் கூறுகையில் கூடுதலாக கிடைத்துள்ள நேரத்தின் மூலம் பணியார்கள் , உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் ,பங்குதாரர்கள் போன்றவர்களை  தாலேகான் ஆலைக்கு மாற்ற  கூடுதல் கால அவகாசம் கிடைத்துள்ளது என கூறியுள்ளர்

புனே ஆலையில் ஆண்டிற்க்கு 1.30 லட்சம் வாகனங்களை தயாரித்து வருகின்றது. முழு உற்பத்தியை எட்டும்பொழுது ஆண்டிற்க்கு 2.20 லட்சம் வாகனங்களை தயாரிக்க திறன் கொண்டதாகும்.

 

Exit mobile version