Automobile Tamilan

ஜீப் எஸ்யுவிகள் இந்திய சந்தையில் விரைவில்

ஃபியட் கிறைஸலர் குழுமத்தின் அங்கமான ஜீப் பிராண்டு எஸ்யூவி கார்கள் இந்திய சந்தையில் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு கொண்டு வரும் முயற்சிகளில் ஜீப் களமிறங்கியுள்ளது. எஸ்யூவி கார்களில் மிக கம்பீரமான அடையாளங்களை கொண்ட நிறுவனங்களில் ஜீப் முக்கியமானதாகும்.

jeep-grand-cherokee-SRT

அமெரிக்காவினை மையமாக கொண்டு செயல்படும் ஜீப் நிறுவனம் 75 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியத்தை கொண்டு விளங்குவதாகும். இந்தியாவின் மஹிந்திரா நிறுவனத்துடன் இணைந்து வில்லியஸ்  ஜீப் இந்தியாவிலும் விற்பனை செய்துள்ளது. ஜீப் பிராண்டின் முகப்பு கிரிலை போலவே மஹிந்திரா தன்னுடைய பாரம்பரிய கிரிலை அமைத்துக்கொள்ளவும் அதுவே காரணம்.

கடந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக தன்னுடைய மூன்று மாடல்களை ஜீப் நிறுவனம் இந்திய சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. அவை  ஜீப் ரேங்கலர் , ஜீப் கிராண்ட் செரோக்கீ மற்றும் பெர்ஃபாமென்ஸ் ரக ஜீப் கிராண்ட் செரோக்கி எஸ்ஆர்டி போன்றவை ஆகும். முதற்கட்டமாக மூன்று மாடல்களும் முழுதும் வடிவமைக்கப்பட கார்களாக இறக்குமதி செய்யப்பட உள்ளது. 2017 ஆம் ஆண்டின் மத்தியில் ஃபியட் தொழிற்சாலையில் ஜீப் கார்களை வடிவமைக்க திட்டமிட்டுள்ளது. மேலும் வரவுள்ள ஜீப் 551 அதாவது ஜீப் சி எஸ்யூவி காரினை முழுதாக இந்தியாவிலே வடிவமைக்கும் நோக்கத்தில் உள்ளது.

ரேங்கலர் அன்லிமிடேட் மாடல் 197 bhp ஆற்றலை வழங்கும் 2.8 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதில 5 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

கிராண்ட் செரோக்கீ  மாடலில் 237 bhp ஆற்றலை வழங்கும்  3.0 லிட்டர் வி6 டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 570 Nm ஆகும். இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.  இதில் 4 வீல்களுக்கும் ஆற்றலை எடுத்து செல்லும் குவாட்ரா ட்ராக்  II  ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது.  இரு வேரியண்டிலும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தினை பெற்றுள்ளது.

கிராண்ட் செரோக்கீ எஸ்ஆர்டி மாடலில் 461 bhp ஆற்றலை வழங்கும் 6.4 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 624Nm ஆகும். இதில் 4 வீல்களுக்கும் ஆற்றலை எடுத்து செல்லும் குவாட்ரா ட்ராக் ஏக்டிவ் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது. இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.  இந்த என்ஜினில் ஈக்கோ மோட் வாயிலாக சிறப்பான எரிபொருள் சிக்கனத்தினை பெற இயலும்.

வருகின்ற ஆகஸ்ட மாத மத்தியில் ஜீப் கார்கள் இந்திய சந்தையில் கிடைக்க தொடங்கலாம்.

Exit mobile version