Automobile Tamilan

ஜேபிஎம் சிட்டி சொகுசு பேருந்து விரைவில்

ஜேபிஎம் மோட்டார் நிறுவனம் வரும் மார்ச் மாதத்தில் சிட்டி பேருந்துகளை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லியை தலைமையாக கொண்டு செயல்படும் ஜேபிஎம் மோட்டார் நிறுவனம் வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பதில் மிகவும் பிரபலமான நிறுவனமாகும்.

ஜேபிஎம் சிட்டி சொகுசு பேருந்து

கடந்த ஆண்டு ஆட்டோ டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட சிட்டிலைஃப் பேருந்துகள் மொத்தம் 6 விதமான வேரியண்ட்களிலும் , 280 எச்பி டீசல் என்ஜின் மற்றும் 230எச்பி , 280எச்பி சிஎன்ஜி ஆப்ஷன் என மொத்தம் மூன்று விதமான என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும்.

சிட்டிலைஃப் பேருந்துகள் பல நவீன் வசதிகளை கொண்டிருக்கும் குறிப்பாக தானியங்கி டிக்கெட் இயந்திரம், பயணிகள் வாகனத்தை நிறுத்தவதற்க்கான பொத்தான்கள் போன்றவை இடம்பெறும். மேலும் ஏபிஎஸ் , இபிடி, மற்றும் இபிஎஸ் போன்ற பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கும்.

வால்வோ மற்றும் ஸ்கானியா நிறுவனங்களின் பேருந்துகளை விட 5 முதல் 10 சதவீதம் விலை குறைவாகவும் பல வசதிகளை கொண்டிருக்கும் என்பதனால் வால்வோ மற்றும் ஸ்கானியா நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை ஜேபிஎம் ஏற்படுத்த உள்ளது.

Exit mobile version