Automobile Tamilan

டாடா கைட்5 செடான் காரின் உற்பத்திநிலை படங்கள் விபரம்

டியாகோ வெற்றியை தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வரவுள்ள டியாகோ காரை அடிப்படையாக கொண்ட கைட்5 செடான் ரக காரின் முழு உற்பத்திநிலை மாடலின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிக்கு வந்த கைட் 5 கான்செப்ட் மாடலின் அடிப்படையிலே அமைந்துள்ள உற்பத்தி நிலை மாடலில் பெரும்பாலான வசதிகள் டியாகோ காரில் இருந்து பெற்றிருக்கும். டியாகோ காரின் தோற்ற அமைப்பிலே அமைந்துள்ள கைட்5 செடான் கார் மாடல் என்பதனால் டிக்கி பூட் ஸ்பேஸ் கொள்ளளவும் 420 லிட்டர் பெற்று விளங்குகின்றது.

கைட் 5 என்ஜின்

டியாகோ காரில் உள்ள அதே என்ஜின் பெற்றிருக்கும் கைட் 5 காரில் 69 பிஹெச்பி ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் 140என்எம் ஆகும்.  1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83.8பிஹெச்பி மற்றும் டார்க் 114 என்எம் ஆகும். இரு என்ஜின்களிலும் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கலாம் . மேலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வரவுள்ளது.

முன்பக்க இரு காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , இபிடி போன்றவை பரவலாக அனைத்து வேரியண்டிலும் இடம்பெற்றிருக்கும். மேலும் யூஎஸ்பி , ஆக்ஸ் இன் , பூளூடூத் ,  ஜூக் கார் ஆப் , நேவிகேஷன் போன்ற வசதிகளை பெற்றிருக்கும்.

டியாகோ காரை விட ரூ.50,000 வரை கூடுதலான விலையில் வரவுள்ள டாடா கைட்5 செடான் காரின் விலை ரூ. 4.50 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வருகின்ற ஜனவரி மாதம் விற்பனைக்கு வரவுள்ள டாடா ஹெக்ஸா காரை தொடர்ந்து கைட் 5 செடான் புதிய பெயரில் விற்பனைக்கு பிப்ரவரி மாதம் வரவுள்ளது.

image source : team-bhp

Exit mobile version