Automobile Tamil

டாடா ஹெக்ஸா Vs டொயோட்டா இனோவா க்ரிஸ்டா – ஒப்பீடு

இந்தியாவின் முன்னணி எம்பிவி ரக கார் மாடலான டொயோட்டா இனோவா காருக்கு போட்டியை தருகின்ற வகையில் டாடா ஹெக்ஸா கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. டாடா ஹெக்ஸா Vs டொயோட்டா இனோவா க்ரிஸ்டா  என இரண்டு கார்களின் ஒப்பீட்டு சிறப்பு தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

டிசைன்

டாடாவின் ஆரியா காரின் அடிப்படையில் டாடா நிறுவனத்தின் புதிய இம்பேக்ட் டிசைன் வடிவ மொழியில் ஹெக்ஸா கார் பல்வேறு நவீன டிசைன் அம்சங்களுடன் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

டொயோட்டாவின் சர்வதேச TNGA பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய இனோவா க்ரிஸ்டா மாடல் நேர்த்தியான அம்சங்களுடன் உறுதியான கட்டமைபினை பெற்றுள்ளது.

இரு மாடல்களுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்ததில்லை என்பதற்கு ஏற்ப மிக சிறப்பான தோற்றத்துடன் புராஜெக்டர் ஹெட்லேம்ப் வசதியுடன் இணைந்த பகல் நேர ரன்னிங் விளக்குகள் பெற்றுள்ளது.

தேன்கூடு கிரில் அமைப்புடன் விளங்கும் ஹெக்ஸா கார் டாடாவின் கார்களுக்கு உரித்தான புதிய வடிவமொழியுடன் அழகாக காட்சியளிக்கின்றது. கம்பீரமான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையிலான அகலமான கிரில் அமைப்புகள் இனோவா காரை தலைநிமிர வைக்கின்றது.

ஹெக்ஸா மற்றும் இன்னோவா அளவுகள்

 அளவுகள்  ஹெக்ஸா  இன்னோவா க்ரீஸ்ட்டா
நீளம் (mm) 4788 4735
அகலம் (mm) 1903 1830
உயரம் (mm) 1791 1795
வீல்பேஸ் (mm) 2850 2750
கிரவுண்ட் கிளியரன்ஸ் (mm) 200 167
 பூட் இடவசி (லிட்டர்) 128 300
 டர்னிங் ரேடியஸ் (M) 5.6 5.4
 எரிபொருள்கலன் (லி) 60 55
 எடை (கிலோ) 2280 1870

இன்டிரியர்

உறுதியான கட்டமைப்பை கொண்ட இனோவா காரில் மரபேனல்களை கொண்டு கட்டமைக்கப்பட்ட பல நவீன வசதிகளை பெற்றுள்ள டேஸ்போர்டில் 7 அங்குல தொடுதிரை அமைப்புடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தினை பெற்றுள்ளது. 7 மற்றும் 8 இருக்கை ஆப்ஷனில் கிடைக்கின்றது.

6 மற்றும் 7 இருக்கை ஆப்ஷனை கொண்ட  உட்புறத்திலும் இரு வண்ண கலவையிலான டேஸ்போர்டு , 5.0 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் ஆப்ஷன் , நேவிகேஷன் அமைப்பு , 10 ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் , நேர்த்தியான புதிய இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் போன்றவை பெற்றிருக்கும்.

ஹெக்ஸா Vs இனோவா எஞ்சின்

இனோவா

இனோவா க்றிஸ்டா காரில் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சன் ஆப்ஷன்கள் கிடைக்கின்றது. பெட்ரோல் மாடலில் 2.7 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் மாடலில் 2.4லிட்டர் மற்றும் 2.8 லிட்டர் என இரு விதமான டீசல் எஞ்சின் ஆப்ஷனுடன் கிடைக்கின்றது.

150hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.4லிட்டர் என்ஜின் டார்க் 343 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 2.4 லிட்டர் இன்னோவா க்ரீஸ்ட்டா மைலேஜ் லிட்டருக்கு 15.10 கிமீ ஆகும்.

174hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.8 லிட்டர் என்ஜின் டார்க் 360 Nm ஆகும். இதில்  6 வேக ஆட்டோமேட்டிக் இடம் பெற்றிருக்கும். 2.8 லிட்டர் இன்னோவா க்ரீஸ்ட்டா மைலேஜ் லிட்டருக்கு 14.29 கிமீ ஆகும். இகோ மற்றும் பவர் மோடினை பெற்றுள்ளது.

ஹெக்ஸா

ஹெக்ஸா காரில் டீசல் எஞ்சின் ஆப்ஷன் மட்டுமே கிடைக்கின்றது. 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் இருவிதமான ஆற்றல் மாறுபாட்டில் கிடைக்கின்றது. அவை

156 bhp ஆற்றலை வெளிப்படுத்தும்  2.2 லிட்டர் வேரிகார் 400 டீசல் எஞ்சின் இடம் பெற்றிருக்கும். இதன் டார்க் 400 Nm ஆகும். இதில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கும். 4 விதமான சூப்பர் டிரைவ் மோட்ஸ் இடம்பெற்றுள்ளது.

வேரிகார் 320 டீசல் எஞ்சின் ஆப்ஷனில் 148 bhp பவரை வெளிப்படுத்தும். இதன் டார்க் 320Nm ஆகும். இதில் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற உள்ளது.

ஹெக்ஸா  இனோவா க்றிஸ்டா
 எஞ்சின் (லிட்டர்) 2.2 2.4 / 2.8
சிலிண்டர் 4 4
பவர் (ஹெச்பி) 156/148 150 / 174
டார்க் (என்எம்) 400/320 343 / 360
கியர்பாக்ஸ் 6 MT / 6 AT
டிரைவ் 4×4 MT / 4×2 MT / 4×2 AT 4×2 AT / 4×2 MT
மைலேஜ் Kmpl 14.4 14.50 – 15.50

பாதுகாப்பு அம்சங்கள்

ஹெக்ஸா காரின் அனைத்து வேரியன்டிலும் 2 காற்றுப்பைகள் , ஏபிஎஸ் நிரந்தரமாக உள்ளது. டாப் வேரியண்டில் 6 காற்றுப்பகைள் , பவர் டெர்ரெயின் மோட் ,  வாகனம் நிலைப்புதன்மை , மலையேற உதவி அமைப்பு போன்றவை கொண்டுள்ளது.

இனோவா காரின் அனைத்து வேரியண்டிலும் 3 காற்றுப்பைகள் , ஏபிஎஸ் நிரந்தரமாக உள்ளது. டாப் வேரியண்டில் 7 காற்றுப்பகைள் , வாகனம் நிலைப்புதன்மை , மலையேற உதவி அமைப்பு போன்றவை கொண்டுள்ளது.

ஹெக்ஸா Vs இனோவா விலை ஒப்பீடு
 விபரம்   ஹெக்ஸா விலை   இனோவா விலை
 விலை ரூ. 11.99 லட்சம் முதல் – 17.49 லட்சம் வரை 14.71 லட்சம் முதல் – 22 லட்சம் வரை

(விலை டெல்லி எக்ஸ்ஷோரூம் )

Exit mobile version