Home Auto News

டிராவல் இன்சூரன்ஸ் என்றால் என்ன ? பலன் தருமா

பஸ் பயணத்தில் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் ஏற்படும் இழப்பீடுகளை சமாளிக்க உதவும் வகையில் வழங்கப்படுகின்ற டிராவல் இன்சூரன்ஸ் என்றால் என்ன ? இதுபற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்.

டிராவல் இன்சூரன்ஸ்

பிரசத்தி பெற்ற ரெட் பஸ் நிறுவனம் வழங்குகின்ற ரூ.15 மதிப்பிலான பயண காப்பீடு தொடர்பான முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம். பயணத்தின் போது ஏற்படுகின்ற எதிர்பாரத விபத்து, உடமைகள் இழப்பு அல்லது விபத்தினால் காயங்கள் ஏற்படும்போது நமக்கு உதவிகரமானதாக டிராவல் இன்சுரன்ஸ் உதவி புரிகின்றது.

வெறும் 15 ரூபாய் டிராவல் இன்ஷுரன்ஸ் வாயிலாக காயமடைந்தவர்களுக்கு 1,00,000 ரூபாய்க்கான மருத்துவமனை செலவுகள், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தால், தினசரி 500 ரூபாய் வீதம் அதிகபட்சம் 7 நாட்களுக்கு உதவித்தொகை, உடைமைகளை இழந்தால் 3,000 ரூபாய் கிடைக்கும். இது தவிர தனிப்பட்ட விபத்துக்கு 600,000 ரூபாய் வழங்குகின்றது.

பஸ் பயணம் ரத்து அல்லது இடையூறு என ஏதாவது  நேர்ந்தால் 1,500 ரூபாய் உள்பட பலதரப்பட்ட பிரச்னைகளுக்கும், பாலிசி எடுத்தவர்களுக்கு இன்ஷுரன்ஸ் க்ளெய்ம் பெறும் முறை வழங்கப்படுகிறது.

டிராவல் காப்பீடு பொறுத்தவரை பெரும்பாலும், ஒரு வயது குழந்தை முதல் 70 வயது முதியவர் வரை பாலிசி வழங்கப்படுகிறது. இந்த பாலிசிக் காலம் ஒரு வருடத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.

மருத்துவமனைச் செலவுகள்! 

பேருந்து பயணத்தின்போது விபத்து நேர்ந்தால் பின்வருகின்ற மருத்துவமனை செலவினங்களை காப்பீடு நிறுவனம், பாலிசிதாரருக்கு திருப்பிச் செலுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் தங்கும் செலவு, நர்சிங் செலவு, மருத்துவ பரிசோதனை செலவு, மருத்துவர் கட்டணம், மருத்துவமனையால் வழங்கப்பட்ட மருந்தகங்களின் செலவு அல்லது மருத்துவமனையல்லாத பதிவு செய்யப்பட்ட மருந்தகத்திலிருந்து வாங்கப்பட்டதற்கான செலவு மற்றும் பிசியோதெரபி செலவு போன்ற மருத்துவ செலவுகளுக்கு க்ளெய்ம் வழங்கப்படுகிறது.

பிரசத்தி பெற்ற ரெட்பஸ் உள்ளிட்ட பல்வேறு தனியார் பஸ் நிறுவனங்களுடன் இணைந்து ஐசிஐசிஐ லம்போர்டு காப்பீடு நிறுவனம் செயல்படுத்தி வரும் இந்த திட்டத்தில் க்ளெய்ம் செய்வது தொடர்பான விபரங்களை பின்வருமாறு காணலாம்.

க்ளெய்ம் செய்யும் வழிமுறை ?

ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் பட்சத்தில் வழங்கப்படுகின்ற இந்த சிறப்பு டிராவல் காப்பீடு திட்டத்தை க்ளெய்ம் செய்ய விபத்து அல்லது உடைமைகள் களவு போகும் பட்சத்திலோ உடனடியாக இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு தெரியப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இதனை தெரியப்படுத்த, இலவச தொலைபேசி எண் 1800 2666 அல்லது ihealthcare (at) icicilombard.com என்ற இமெயில் முகவரிக்குத் தெரியப்படுத்தலாம். மேலும் இதுதொடர்பான டாக்குமென்டுகளை அதாவது மருத்துவமனை ரசீது, மருத்துவமனை செலவு உள்பட தேவையான மற்றும் சரியான ஆவணங்களைக் கடிதம் மூலமாக அனுப்பி வைக்க வேண்டிய முகவரி

ICICI LOMBARD GENERAL INSURANCE COMPANY LIMITED

ICICI Lombard General Insurance Company Ltd. Group Travel Insurance

ICICI Bank Tower, Plot No. 12,

Financial District, Nanakram Guda, Gachibowli,

Hyderabad, Telangana,  Pin Code: 500032

க்ளெயம் செய்வதில் பிரச்சனைகள் எதிர்கொண்டால் ?

கீழே வழங்கப்பட்டுள்ள காப்பீடு குறைதீர்ப்பு மையத்தைத் தொடர்பு கொண்டு க்ளெய்ம் பெற்றிடுங்கள்.

Office of the Insurance Ombudsman,

Fatima Akhtar Court,

4th Floor, 453 (old 312),

Anna Salai, Teynampet,

CHENNAI – 600 018.

Tel.:- 044-24333668 / 24335284

Fax:- 044-24333664

Email:- bimalokpal.chennai@gbic.co.in

Exit mobile version