டிவிஎஸ் அப்பாச்சி 200 RTR பைக்கின் உற்பத்தி நிலை சோதனை ஓட்ட படங்கள் வெளியாகியுள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக்கில் ஸ்பிளிட் இருக்கைகளை பெற்றுள்ளது.

டார்கன் கான்செப்டினை தழுவியுள்ள டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக்கில் 24 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 200சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். சோதனை ஓட்டத்தில் இறுதி கட்டத்தை எட்டியுள்ள டிவிஎஸ் அப்பாச்சி வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பார்வைக்கு வரவுள்ளது.

உற்பத்தி நிலை புகைப்போக்கி மிக நேர்த்தியாக உள்ளது மாடல் முழுமையாக வரும்பொழுது குரோம்பூச்சினை பெற்றிருக்கலாம்.

முக்கிய விபரங்கள்

  • டிவிஎஸ் டார்கன் கான்செப்ட் மாடலை தழுவியதாக இருக்கும்.
  • அப்பாச்சி 200 பைக் இரு வேரியண்டில் விற்பனைக்கு வரலாம்.
  • 27 பிஎச்பி ஆற்றல் மற்றும் 24என்எம் டார்க் வழங்கும் 200சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.
  • 0 முதல் 60 கிமீ வேகத்தினை 3.40 விநாடிகளில் எட்டும்.
  • 5 வேகம் அல்லது 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கலாம்.
  • அப்பாச்சி 200 பைக்கின் கூலிங் சிஸ்டம் பிஎம்டபிள்யூ நிறுவனத்தால் உருவாகப்பட்டுள்ளது.
  • ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனல் வேரியண்டாக இருக்கும்.
  • மல்டி ஸ்போக் அலாய் வீல் பொருத்தப்பட்டிருக்கும்.
  • டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரை கொண்டிருக்கும்.
  • அப்பாச்சி 180 போலவே முகப்பு விளக்கில் எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் இருக்கும்.
  • ஒரு இருக்கை மற்றும் ஸ்பிளிட் என இரு இருக்கை ஆப்ஷனில் இருக்க வாய்ப்பு உள்ளது.
  • வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 யில் சந்தைக்கு வரவுள்ளது.
  • விலை ரூ.1.20 லட்சம் இருக்கலாம்

tvs-apache-200-speedometer tvs-apache-200-top-view tvs-apache-2001 tvs-apache-rear-exhaust tvs-apache-200 tvs-apache-200-front tvs-apache-200-engine

tvs-apache-200-front

tvs-apache-rear-exhaust tvs-apache-2001 tvs-apache-200-top-view

சோதனை ஓட்ட கார்கள் மற்றும் பைக்குகளை கண்டால் நீங்களும் படம் பிடித்து அனுப்பி வையுங்கள்.. [சிறந்த படங்களை அனுப்பி வைப்பவர்களுக்கு பரிசுகள் உண்டு..அனுப்ப வேண்டிய முகவரி ; [email protected]