Automobile Tamilan

டீசல் கார்களுக்கு தடை நீக்கம் – டெல்லி

பல மாதங்களாக தொடர்ந்த டீசல் கார்களுக்கு தடை டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் நீக்கம் செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது. 2000சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட டீசல் கார்களுக்கு 1 சதவீத கூடுதல் பசுமை வரி எக்ஸ்ஷோரும் விலையில் விதிக்கப்படுள்ளது.

toyota-fortuner

2000 சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட டீசல் கார்களுக்கான தடை கடந்த ஆண்டின் டிசம்பர் மாத மத்தியில் தொடங்கி பல தற்பொழுது வரை நீட்டிக்கப்பட்டு வழக்கு முடிவடைந்துள்ளது. இதனால் மெர்சிடிஸ்-பென்ஸ் , மஹிந்திரா & மஹிந்திரா , டாடா மோட்டார்ஸ் , டொயோட்டா போன்ற உற்பத்தி நிறுவனங்களுக்கு சாதகமான தீர்ப்பாக அமைந்துள்ளது.

டொயோட்டா , மெர்சிடிஸ்-பென்ஸ் , மஹிந்திரா, டாடா  போன்ற நிறுவனங்கள் பல முறை தொடர்ச்சியாக  மேல்முறையீடு வழக்கு நடைபெற்று வந்த நிலையில் உச்சநீதி மன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பில் பெரிய டீசல் எஸ்யுவி ரக கார்கள் , 2000சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட கார் தயாரிப்பாளர்கள் 1 சதவீத கூடுதல் பசுமை வரியை எக்ஸ்ஷோரூம் விலையில் செலுத்த வேண்டும் இதனை டீலர்கள் அல்லது கார் தயாரிப்பாளர்கள் செலுத்திய பின்னரே டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் பதிவு செய்ய முடியும்.

1 சதவீத கூடுதல் பசுமை வரியை செலுத்துவதற்கு அரசு வங்கிகளில் தனியான கணக்கினை தொடங்கப்பட உள்ளது. அந்த கணக்கில் மட்டுமே செலுத்த வேண்டும்.

மெர்சிடிஸ்-பென்ஸ் பலமுறை மேல் முறையீடு செய்த பொழுது கூடுதல் பசுமை வரியை செலுத்துவதாக பலமுறை தெரிவித்திருந்தது.  பெரிதும் டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்பட்டதில் பாதிக்கப்பட்ட டொயோட்டா கிரிலோஸ்கர் , மெர்சிடிஸ்-பென்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்றவை ஆகும்.

 

Exit mobile version