Automobile Tamilan

டெஸ்லா எலக்ட்ரிக் காருக்கு போட்டியாக மஹிந்திரா எலக்ட்ரிக் கார்

இந்தியாவின் மஹிந்திரா குழுமத்தின் கீழ் செயல்படும் பிரசத்தி பெற்ற இத்தாலியின் பினின்ஃபாரீனா டிசைன் ஸ்டூடியோ நிறுவனத்தின் வாயிலாக டெஸ்லா கார்களுக்கு போட்டியாக சூப்பர் எலக்ட்ரிக் காரினை பின்னின்ஃபாரினா பிராண்டில் தயாரிக்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

pininfarina-h2-speed-concept

கடந்த வருடத்தில் மஹிந்திராவின் தொழில்நுட்ப பிரிவு பின்னின்ஃபாரினா நிறுவனத்தை கையகப்படுத்தியது. மஹிந்திரா நிறுவனத்தின் டியூவி300 , கேயூவி100 மற்றும் நூவோஸ்போர்ட் போன்ற எஸ்யூவி மாடல்களின் இன்டிரியர் மற்றும் தோற்ற அமைப்பில் பின்னின்ஃபாரினா முக்கிய பங்காற்றி உள்ளது.

உலக அளவில் பிரசத்தி பெற்று விளங்கும் ஃபெராரி , பென்ட்லீ , அஸ்டன் மார்ட்டின் போன்ற சூப்பர் பிராண்டு கார்களின் வடிவமைப்பில் பின்னின்ஃபாரினா டிசைன் ஸ்டூடியோ நிறுவனம் முக்கிய பங்காற்றியுள்ளது.  சமீபத்தில் ஸ்வீஸ் நாட்டின் க்ரீன் ஜிடி நிறுவனத்துக்கு H2 ஸ்பீட் கான்செப்ட் காரினை ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வகையில் வடிவமைத்து கொடுத்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் கொரிய நாட்டு பிரிவான சாங்யாக எஸ்யூவி கார்களை ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் சிறப்பான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்யும் வகையில் அதன் தோற்ற அமைப்பு , என்ஜின் , டிரைவ்ட்ரெயின் போன்றவை வடிவமைக்கப்படும். மஹிந்திரா இந்தியா மற்றும் சாங்யாங் கார்கள் பெரும்பாலும் ஒரே பிளாட்பாரத்திலே கார்களை தயாரிக்கும் வகையில் எதிர்கால திட்டங்களை மஹிந்திரா வகுத்து வருகின்றது.

ஆண்டுக்கு 1.50 லட்சம் கார்களை விற்பனை செய்து வரும் சாங்யாங் நிறுவனத்தின் விற்பனையை அடுத்த 5 வருடங்களில் ஆண்டுக்கு 2.50 லட்சம் கார்கள் முதல் 3.00 லட்சம் கார்கள் வரை உற்பத்தி செய்ய இலக்கினை வகுத்துள்ளது. மஹிந்திரா எலக்ட்ரிக் பிரிவின் இ2ஓ கார் சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  மஹிந்திரா மற்றும் சாங்யாங் எதிர்கால எஸ்யூவி கார்கள் எலக்ட்ரிக் வேரியண்ட்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்க திட்டமிட்டுள்ளது. இதுதவிர டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் வகையில் ஐரோப்பா , அமெரிக்கா போன்ற சந்தைகளை குறிவைத்து எலக்ட்ரிக் சூப்பர் காரை பினின்ஃபாரினா பிராண்டில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

Exit mobile version