Automobile Tamilan

டொயோட்டா என்ஜின் தயாரிப்பு பிரிவு திறப்பு – பெங்களூரு

இந்திய டொயோட்டா பிரிவின் சார்பாக புதிய டீசல் என்ஜின் தயாரிப்பு தொழிற்சாலையை  பெங்களூரு ஜிகினி தொழிற்பேட்டையில் சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுக்கு 1.08 லட்சம் என்ஜின்கள் தயாரிக்கும் திறன் கொண்டதாக விளங்கும்.

toyota-innova-crysta-expo-2016

டொயோட்டா இன்டஸ்டீரிஸ் இஞ்ஜின் இந்தியா பிரைவேட் லிமிட்..  ( Toyota Industries Engine India Pvt. Ltd – TIEI ) என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள நிறுவனத்தை கர்நாடக மாநில முதல்வர் திரு.சித்தராமையா திறந்து வைத்தார். டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் 98.85 சதவீத பங்கினை கொண்டுள்ள தொழிற்சாலையில் கிர்லோஸ்கர் சிஸ்டம்ஸ் 1.15 சதவீத பங்கினை பெற்றுள்ளது.

ஜிகினி தொழிற்பேட்டையில் 22 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள TIEI ஆலையில் 1200 பணியாளர்கள் நேரடியாக வேலை பெற்று ஆண்டுக்கு 1,08,000 ஜிடி டீசல் என்ஜின்களை உருவாக்க உள்ளனர். கடந்த வருடம் உலகயளவில் அறிமுகம் செய்யப்பட்ட GD (Global Diesel) டீசல் என்ஜின்களான 2.4 லிட்டர் மற்றும் 2.8 லிட்டர் டீசல் என்ஜின்கள் தயாரிக்கப்பட உள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட ஜிடி வரிசை என்ஜின்கள் மிகச்சிறப்பான எரிபொருள் சிக்கனம் மற்றும் அதிகப்படியான வெப்ப செயல்திறனை கொண்ட கம்பசன்களை ( Economy with Superior Thermal Efficiency Combustion – ESTEC) பெற்ற என்ஜின்களாகும்.  புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களில் இரு என்ஜின்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முந்தைய என்ஜின் தலைமுறையை விட கூடுதலாக 13 சதவீத எரிபொருள் சிக்கனமும் 47 %  கூடுதல் ஆற்றல் திறனையும் பெற்றுள்ளது. ரூ.1,100 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள புதிய என்ஜின் ஆலையில் தற்பொழுது பிஎஸ் 4 மாசு உமிழ்வு கொண்ட என்ஜின்கள் தயாரிக்கப்படுகின்றது. மேலும் பிஎஸ் -5 மற்றும் பிஎஸ்-6 மாசு உமிழ்வுக்கு ஏற்றபடி என்ஜினை மேம்படுத்தும் வகையில் தொழிற்சாலை உருவாக்கப்பட்டுள்ளது.

150hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.4லிட்டர் ஜிடி என்ஜின் டார்க் 343 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 2.4 லிட்டர் இன்னோவா க்ரிஸ்ட்டா மைலேஜ் லிட்டருக்கு 15.10 கிமீ ஆகும்

174hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.8 லிட்டர்  ஜிடி என்ஜின் டார்க் 360 Nm ஆகும். இதில்  6 வேக ஆட்டோமேட்டிக் இடம் பெற்றிருக்கும். 2.8 லிட்டர் இன்னோவா க்ரிஸ்ட்டா மைலேஜ் லிட்டருக்கு 14.29 கிமீ ஆகும்.

[irp posts=”8209″ name=”டொயோட்டா கார்களுக்கு 7 வருட நீட்டிக்கப்பட்ட வாரண்டி”]

 

 

 

Exit mobile version