Automobile Tamil

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 200 ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்

புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 200 எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 200 ஃபேஸ்லிஃப்டில் தோற்றம் மற்றும் உட்புறம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 200
டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 200

ஜாப்பானில் இன்று அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 200 எஸ்யுவி காரில் தோற்றம் மற்றும் உட்புற மேம்பாடுகளுடன் பாதுகாப்பு வசதிகள் அனைத்து மாடல்களிலும் நிரந்தர அம்சங்கள் ஆகியுள்ளது.

தோற்றம்

மிரட்டலான தோற்றத்தில் கம்பீரத்துடன் விளங்கும் எல்சி 200 எஸ்யூவி காரின் முகப்பில் குரோம் பட்டைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் குரோம் பட்டை முகப்பு விளக்கின் அடிப்பகுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிய எல்இடி முகப்பு விளக்குகள் மேம்படுத்தப்பட்ட பம்பர்கள் , பனி விளக்கு அறை மற்றும் டிசைன் புதுப்பிக்கப்பட்ட பானெட் என ஓட்டுமொத்த முகப்பு தோற்றத்தில் புதிய கம்பீரத்தை லேண்ட் க்ரூஸர் 200 பெற்றுள்ளது.

பின்புறத்தில் உள்ள குரோம் பட்டை முழுமையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. எல்இடி டெயில் விளக்குகளை பெற்றுள்ளது. காப்பர் பிரவுன் மைகா , டார் பூளூ மைகா என இரண்டு விதமான புதிய வண்ணங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

இன்டிரியர்

பல தகவல்களை வழங்கும் புதிய இன்ஸ்டூர்மென்ட் கிளஸ்ட்டர் உள்ளது. உட்புறத்தில் மேம்படுத்தப்பட்ட டேஸ்போர்ட் சென்ட்ரல் கன்சோல் மற்றும் 4.2 இஞ்ச் அகலம் கொண்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு உள்ளது.

புதிய ஸ்டீயரிங் வீல் , நான்கு விதமான வண்ணங்களில் கேபின் போன்றவை பெற்றுள்ளது.

என்ஜின்

இந்திய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் மாடலில் 4.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 268எச்பி மற்றும் டார்க் 650என்எம் ஆகும்.
முந்தைய என்ஜின் ஆற்றலை விட 7 எச்பி கூடுதலாக கிடைக்கும் எரிபொருள் சிக்கனம் 8 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ஜாப்பானில் 314எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வசதிகள்

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 200 எஸ்யூவி காரின் அனைத்து வேரியண்டிலும் நவீன பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 200 

டொயோட்டா சென்ஸ் P 

டொயோட்டா சென்ஸ் பி பாதுகாப்பு அம்சமானது  விபத்து ஏற்படுவதை தடுப்பதுடன் பாதசாரிகளை கண்டுனர்ந்து செயல்படும். ரேடார் மற்றும் கேமரா உதவியுடன் பாதசாரிகளை அறிந்த தானியங்கி முறையில் வேகத்தினை கட்டுப்படுத்தி கொள்ளும்.
கேமரா உதவியுடன் சாலைகளை ஸ்கேன் செய்து அதற்கேற்ப ஓட்டுநருக்கு சரியான பாதையை காட்டும் லேன் டிபார்ச்சர் அலர்ட் வசதி உள்ளது.
முன்பக்க ரேடார் மற்றுக்ககேமரா உதவியுடன் நெரிசல் மிகுந்த சாலைகளில் அருகாமையில் உள்ள வாகனங்களை கண்கானித்து வழிகாட்டும் ரேடார் க்ரூஸ் கட்டுப்பாடு உள்ளது.
தானியங்கியாக ஹைபீம் மற்றும் லோபீம் செய்துகொள்ளும் முகப்பு விளக்குளை பெற்றுள்ளது.
ஜாப்பானில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 200 இந்தியாவிலும் விற்பனைக்கு வரவுள்ளது.
Toyota Land Cruiser 200 facelift revealed 
Exit mobile version