2020-ல் நிசான் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் வருகை

மிக வேகமாக வளர தொடங்கி உள்ள எலக்ட்ரிக் கார்களுக்கான சந்தையை நிசான் நிறுவனம் எல்க்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரை கொண்டு வலுப்படுத்தும் வகையில் 2020-ல் நிசான் பிளேட்கிளைடர் கான்செப்ட் மாடலை அடிப்படையாக கொண்டு ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

எதிர்காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற கார்களுக்கு மிகப்பெரும் மாற்றாக எலக்ட்ரிக் கார்கள் அமைய உள்ள நிலையில் பெரும்பாலான முன்னனி தானூர்தி தயாரிப்பார்கள் மின்சார கார்களுக்கு மிகப்பெரிய முதலீட்டினை செய்ய தொடங்கி உள்ளனர். 2020க்கு பிறகு பெரும்பாலான நாடுகளில் மின்சார கார்கள் மற்றும் தானியங்கி கார்கள் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது.

Nissan-BladeGlider-Concept-interior

நிசான் ஐரோப்பா மின்சார வாகன பிரிவு தலைவர் கரேத் டன்ஸ்மோர் கூறுகையில் தற்பொழுது எவ்விதமான தேவையும் எலக்ட்ரிக் கார்களுக்கு இல்லை என்றாலும் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரை தயாரிக்கும் திறனை நிசான் பெற்று விளங்குகின்றது. 2020க்கு பிறகு சந்தை நிலை மாறும் என்பதனால் அதன் பிறகு நிசான் நிறுவனம் எலக்ட்ரிக் கார் பிரிவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான மாடல்களை வெளியிடும் என தெரிவித்துள்ளார்.

நிசான் நிறுவனம் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் நிசான் ஜிடி-ஆர் மற்றும் 370 இசட் போன்ற கார்களுடன் சந்தையில் சிறந்து விளங்குகின்றது. சமீபத்தில் பிரேசில் நாட்டில் நடைபெற்ற ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட நிசான் பிளேட்கிளைடர் புரோடோடைப் மாடல் 3 இருக்கைகளுடன் விளங்கும் 268PS ஆற்றல் மற்றும் 707 Nm டார்க் வெளிப்படுத்தும் இரு மின்சார மோட்டார்களை பெற்றிருக்கும். பிளேட்கிளைடர் வேகம் மணிக்கு 190 கிலோமீட்டர் மற்றும் 0 முதல் 100 கிமீ வேகத்தை ஐந்து விநாடிகளில் எட்டிவிடும்.

Exit mobile version